உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு
Showing posts with label பண்டிகைகள். Show all posts
Showing posts with label பண்டிகைகள். Show all posts

16 October 2009

தீபாவளி - தெரியாத தகவல்கள் !



தீபாவளி என்றவுடன் ஞாபகத்தில் வெடிப்பது பல வகை பட்டாசுகள்.



தீபாவளியன்று ஸ்பெஷலாக நமது குஜராத் மாநிலத்தில் பட்டம் விடும் போட்டி நடைபெறும். சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்வர். குழுக்களாகவும் மாணவர்கள் கலந்துக் கொள்வர். வகை வகையான, தினுசு தினுசான பட்டங்கள் வானில் பட்டொளி வீசி பறக்கும்.
-----------------------------------------------------------------------------------


குஜராத் மாநிலத்தில் ஒரு வினோதமான பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. குஜராத் பகுதியில் தீபாவளி மறுநாள் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவு, நோய் நொடி, ஏவல் சூனியம் வகையறாக்கள் நீங்கும் பொருட்டு ஒரு விஷயத்தை செய்கிறார்கள். அதாவது வீட்டில் உளுந்து வடை தயாரித்து அதை மாலை வேளையில் நாற்சந்தியில் எறிந்து விட்டு திரும்பிப் பாராமல் வந்து விடுவது ஐதீகமாக கருதப்படுகிறது.

----------------------------------------------------------------------------------


நேபாளத்தில் தீபாவளி மிகப் பிரபலம். அந்த நாட்டில் தீபாவளி என்பது நம் நாட்டில் போல் இல்லாமல் பல்வேறு வகையில் வித்தியாசப்பட்டது. நேபாளத்தில் தீபாவளியை "தீஹார்' என்ற பெயரில் நன்றி கூறும் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையைப் போல பல நாட்களுக்கு கொண்டாடப்படுவதுதான் நேபாள தீபாவளி. அங்கே ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் காக்கைகளுக்காக நடத்தப்படுகிறது. இரண்டாம் நாள் நாய்களுக்காக நடத்தப்படுகிறது. மூன்றாம் நாள் பசுக்களுக்காக கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் மற்ற பிராணிகளுக்காக. ஐந்தாம் நாள் சகோதர உணர்வை வளர்க்க "பைடலாதாஜ்' என்னும் ராக்கி பண்டிகையாகவும் கொண்டாடுகின்ற னர்.
--------------------------------------------------------------------------------

அமெரிக்க காலண்டரில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்தியப்பண்டிகை "தீபாவளி' மட்டும் தான்!
----------------------------------------------------------------------------------


நாம் மட்டும் தீபாவளியை கொண்டாடுவதோடு முடித்துவிடாமல் பண்டிகையை பகிர்வோம். நம்மால் முடிந்த துணி, பட்டாசு, இனிப்புகளை இல்லாதவர்களுக்கு கொடுப்போம். அருகில் இருக்கும் வேற்று மத நண்பர்களை அன்பாக இழுத்து வந்து நம் கொண்டாட்டத்தில் வி.ஐ.பி.யாக்கி மகிழ்வோம். விட்டு போயிருந்த உறவுகளை நாமே தேடிச் சென்று பண்டிகையை காரணம் காட்டி நம்மோடு சேர்த்துக் கொள்வோம்.

கொண்டாடுவோம்! மகிழ்வோம் !


Read more...

15 October 2009

தீபாவளி கொண்டாடினார் அதிபர் ஒபாமா !



நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கொடியவன் நரகாசுரனை கொல்லப்பட்ட மகிழ்வை இந்து, சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் தீபத்திருநாளாக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக மக்கள் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகர வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் , கூட்டமாக பர்சேஸ் செய்து வருகின்றனர். குழந்தைகள் பட்டாசு கடைகளை மொய்க்க துவங்கி விட்டனர்.

அமெரிக்காவில் இதுவரை நடக்காத இனிய செய்தி


இந்நிலையில் இது வரை இல்லாத விஷயமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்தார். இவ்விழாவில் ஒபாமா நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற இந்திய அதிகாரிகள், இந்திய சமூக பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடினர் . விழாவில் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இத்திருநாள் குறித்து ஒபாமா கூறுகையில் ; இந்து , சீக்கியர், ஜெயின். மற்றும் புத்த இனத்தவர்கள் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். கொடியவரை வீழ்த்திய மகிழ்வில் கொண்டாடடும் நாள் . வெற்றியின் அடையாளமாகவும், அறிவின்மை என்ற இருளை அகற்றி ஒளியேற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இது கொண்டாட்ட தருணம் மட்டுமல்ல. நம்மில் பலர் ஏழைகளாகவும் , இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களை நினைத்து இத்திருநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !


Read more...

02 October 2009

மகாத்மா !


உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஓர் ஆச்சரியமான விஷயம் தென்படுகிறது. 6 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தத்துவ ஞானியோ, சமுதாய வழிகாட்டியோ உலகில் தோன்றியவண்ணம் இருப்பதுதான் அந்த ஆச்சரியமான விஷயம். கி.மு. 6-வது நூற்றாண்டில் கௌதம புத்தர் தோன்றியதைத் தொடர்ந்து 6 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றியவர்கள்தான் இயேசுநாதர், நபிகள் நாயகம், ஆதிசங்கரர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர்.

இன்று காந்தி ஜயந்தி 02 அக்டோபர்.



காந்தியடிகளின் தீண்டாமைப் பிரசாரத்தின் வெற்றிதான் இன்றைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் எழுச்சிக்கே அடிப்படைக் காரணம் என்பதை யார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரித்திரம் உணர்த்தும். காந்தியடிகளின் தீர்க்கதரிசனம் எத்தகையது என்பதற்கு அவர் தனது தொண்டர்களுக்குப் போதித்த எளிமையான வாழ்க்கை முறையும் சேவை மனப்பான்மையுடன் கூடிய சமுதாயப் பணியும் கட்டியம் கூறுகின்றன.

\

"கிராமராஜ்யம்'தான் காந்தியடிகள் கண்ட "ராமராஜ்யம்'.

தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகள் இருந்த போது தமிழ் மொழியை கற்கத் தொடங்கினார். "தமிழ் மொழியைக் கற்கும் போது அதன் அழகை அறியலானேன்' என்றும், "தமிழ் மொழி உள்ளம் கவரும் ஓர் இனிய மொழி' என்றும் அவர் கூறியுள்ளார்.


தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டதற்கு காரணம் திருக்குறள். "நான் திருக்குறளின் மூலத்தை நேராக கற்க வேண்டுமென ஆசைப்பட்டேன். இது, எனது மனதில் ஆழமாக பதிந்தது. எனவே, தமிழ் கற்கத் துவங்கினேன்' என்றும் கூறியுள்ளார். இந்தியா ஒன்றுபடுவதற்கு தமிழர்கள் இந்தி மொழியை கற்பது மட்டும் போதாது. சென்னை ராஜ்யத்திற்கு வடக்கே உள்ளவர்களும் தமிழை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது காந்தியின் கருத்து.

"மகாத்மா' குறித்து காந்தி கூறியது: மகாத்மா என்னும் பட்டத்தை நான் மதிக்கவில்லை. பல சமயம் இப்பட்டம் எனக்கு மனத்துன்பத்தை தந்துள்ளது. எக்காலத்திலும் அப்பட்டத்தினால் நான் பெருமைப்பட்டுக் கொண்டதாக ஞாபகமில்லை. என்னை மகாத்மா எனக் கூறி பனிப்பாங்கான இமயமலையின் சிகரம் வரை ஏற்றி வைத்துவிட்டு, இவ்வளவு மாபெரும் மகாத்மாவின் போதனைகளைப் பின்பற்றுவது என்ன முடிகிற காரியமா எனக்கூறி என் காலை வாரி விடப்பார்க்கிறீர்களா... பொருட்காட்சி சாலையில் வைத்துள்ள ஒரு ஜந்துவின் நிலையில் தான் உள்ளேன். இவ்வாறு காந்தி கூறியுள்ளார்.



மானுடம் தழைக்க வேண்டுமானால் காந்தியம் வெல்ல வேண்டும். காந்தியம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல, காரணம், அது ஒரு சத்தியசோதனை!


Read more...

21 September 2009

ரம்ஜான் - "பித்ரா' !




முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா!


நபிகள் நாயகம் அவர்களிடம், ஒருவர் வந்து, "இறைத்தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?' என்று வினவினார். இறைத்தூதர் அவர்கள், ஒரே வார்த்தையில் விடை அளித்தனர். "பசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்!' "அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று, அண்ணலார் ஓங்கி முழங்கினார். இதே வழிகாட்டுதல் தான், ரம்ஜான் மாதத்திலும் பளிச்சிடுகிறது. "ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்!' "ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்!' "இறை வழியில் தானதர்மங்களை வாரி வழங்குங்கள்!' "வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்!' இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.


பெருநாளன்று, யாரும் பசி பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது. அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளனர்.



பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக, "பித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில் ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப் பதாக வைத்து கொள்வோம். ஆறு பேருக் கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.



ஓர் ஆண்டில் ரம்ஜான் எனும் மாதம், திருக்குர் ஆன் வழங்கப்பட்ட அல்லாவிடமிருந்து அருளப்பட்ட மாதம் முழுவதும் நோன்பு இருந்து, ஷவ்வால் பிறை தெரிந்ததும் பெருநாள் எனும் திருநாளை, ஏழை எளிய மக்களுக்கு, "பித்ரா' எனப்படும் தர்மத்தை வழங்கி, அவர்களும் ரம்ஜான் பெருநாள் கொண்டாட வழி வகுத்தனர்.

ஏழைகள், பணக்காரர்கள் பேதமின்றி இந்த ரம்ஜான் பண்டிகையை எல்லாரும் கொண்டாடுவோம்.


Read more...

02 September 2009

ஓண‌ம் ப‌ண்டிகை


கேரள ம‌க்க‌ளி‌ன் பார‌ம்ப‌ரிய ‌விழாவான ஓண‌ம் ப‌ண்டிகை மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, அத்தப்பூ கோலம் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



ஓ‌ண‌ம் அ‌ன்று ‌சிற‌ப்பான உணவு வகைகளை சமை‌த்து உற‌வின‌ர்களுட‌ன் உ‌ண்டு ம‌கி‌ழ்வா‌ர்க‌ள்.மேலும் `சென்ட' என்றழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேளதாளத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், பா‌ம்பு போ‌ன்று ‌நீ‌ண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ஓணம் திருநாளையொட்டி நடத்தப்படுவது வழ‌க்க‌ம்.



அனைத்து மக்களும் சாதி, சமய பாகுபாடு இல்லாமல் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இந்த திருவிழா நடைபெறும்.



கேரளா‌வை முன்பு ஒரு காலத்தில், மகாபலி சக்கரவர்த்தி என்ற அசுரன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் ம‌க்க‌ள் ‌மிகு‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சியுடனு‌ம், இ‌ன்பமாகவு‌ம் வா‌ழ்‌ந்தன‌ர்.

அ‌வ்வாறு ந‌ல்லா‌ட்‌சி பு‌ரி‌ந்த மகாப‌லி சக்கரவர்த்தி கேரளாவுக்கு விஜயம் செய்யும் நாளாக ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 தினங்கள் கொண்டாடப்படுகிறது.

"அத்தம்'' என்று கூறப்படும் முதல் நாளில் இருந்தே மகாபலி சக்கரவர்த்தியின் வருகைக்காக வீட்டின் முன்பு மலர்களால் பூக்கோலம் போடுவார்கள். இது `அத்த பூ கோலம்' என்று அழைக்கப்படுகிறது. 10-வது நாளான திருவோண தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளை அலங்கரித்து வைப்பார்கள். மேலும் புத்தாடை அணிந்து விசேஷ பூஜைகளிலும் பங்கேற்பார்கள்.

எல்லோருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!


Read more...

23 August 2009

விநயாகர் சதுர்த்தி!



ஆவணிமாத, வளர்பிறை சதுர்த்தி திதியில் அவதரித்தவர் விநாயகப்பெருமான் என புரா ணங்கள் சொல்கின்றன. அவர், யானைத்தலையை உடையவர். இதுவே விநயாகர் சதுர்த்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.



விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.


"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"



எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


Read more...

13 August 2009

கிருஷ்ண ஜெயந்தி !


மதுராவில் பிறந்த கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், தனது தாய் மாமனான கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான்.

தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.


தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.

தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் பரமாத்மா.

கீதை அருளிய கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி.தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார்.

நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் கதை, தாமரை தாங்கி, மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி அணிந்து சகலவிதமான ஆபரணங்களையும் அணிந்துகொண்டு தோன்றினார். பின்னர் தேவகியின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன்னைச் சிறு குழந்தையாக உருமாற்றி பாலகிருஷ்ணராக அவதாரம் செய்தார்.

எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம் செய்கிறார்.

பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகம் தோறும் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.

""ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே'' என்னும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய பகவானின் திருநாமத்தை குறைந்தபட்சம் 108 முறை உச்சரித்தால் ஒருவர் இக்கலியுகக் கேடுகளில் இருந்து விடுபடுவதுடன் கிருஷ்ணரின் பூரண அருளைப் பெற்று வாழலாம்.

வாழ்த்துகள்!



பகவான் பேசுவதில்லை,பக்தியும் குறைவதில்லை!


Read more...

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP