உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

16 October 2009

தீபாவளி - தெரியாத தகவல்கள் !தீபாவளி என்றவுடன் ஞாபகத்தில் வெடிப்பது பல வகை பட்டாசுகள்.தீபாவளியன்று ஸ்பெஷலாக நமது குஜராத் மாநிலத்தில் பட்டம் விடும் போட்டி நடைபெறும். சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்வர். குழுக்களாகவும் மாணவர்கள் கலந்துக் கொள்வர். வகை வகையான, தினுசு தினுசான பட்டங்கள் வானில் பட்டொளி வீசி பறக்கும்.
-----------------------------------------------------------------------------------


குஜராத் மாநிலத்தில் ஒரு வினோதமான பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. குஜராத் பகுதியில் தீபாவளி மறுநாள் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவு, நோய் நொடி, ஏவல் சூனியம் வகையறாக்கள் நீங்கும் பொருட்டு ஒரு விஷயத்தை செய்கிறார்கள். அதாவது வீட்டில் உளுந்து வடை தயாரித்து அதை மாலை வேளையில் நாற்சந்தியில் எறிந்து விட்டு திரும்பிப் பாராமல் வந்து விடுவது ஐதீகமாக கருதப்படுகிறது.

----------------------------------------------------------------------------------


நேபாளத்தில் தீபாவளி மிகப் பிரபலம். அந்த நாட்டில் தீபாவளி என்பது நம் நாட்டில் போல் இல்லாமல் பல்வேறு வகையில் வித்தியாசப்பட்டது. நேபாளத்தில் தீபாவளியை "தீஹார்' என்ற பெயரில் நன்றி கூறும் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையைப் போல பல நாட்களுக்கு கொண்டாடப்படுவதுதான் நேபாள தீபாவளி. அங்கே ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் காக்கைகளுக்காக நடத்தப்படுகிறது. இரண்டாம் நாள் நாய்களுக்காக நடத்தப்படுகிறது. மூன்றாம் நாள் பசுக்களுக்காக கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் மற்ற பிராணிகளுக்காக. ஐந்தாம் நாள் சகோதர உணர்வை வளர்க்க "பைடலாதாஜ்' என்னும் ராக்கி பண்டிகையாகவும் கொண்டாடுகின்ற னர்.
--------------------------------------------------------------------------------

அமெரிக்க காலண்டரில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்தியப்பண்டிகை "தீபாவளி' மட்டும் தான்!
----------------------------------------------------------------------------------


நாம் மட்டும் தீபாவளியை கொண்டாடுவதோடு முடித்துவிடாமல் பண்டிகையை பகிர்வோம். நம்மால் முடிந்த துணி, பட்டாசு, இனிப்புகளை இல்லாதவர்களுக்கு கொடுப்போம். அருகில் இருக்கும் வேற்று மத நண்பர்களை அன்பாக இழுத்து வந்து நம் கொண்டாட்டத்தில் வி.ஐ.பி.யாக்கி மகிழ்வோம். விட்டு போயிருந்த உறவுகளை நாமே தேடிச் சென்று பண்டிகையை காரணம் காட்டி நம்மோடு சேர்த்துக் கொள்வோம்.

கொண்டாடுவோம்! மகிழ்வோம் !

6 கருத்துக்கள்:

muthu,  October 16, 2009 at 2:26 PM  

Good information
Its very useful to all of us.

இராகவன் நைஜிரியா October 16, 2009 at 3:33 PM  

// நாம் மட்டும் தீபாவளியை கொண்டாடுவதோடு முடித்துவிடாமல் பண்டிகையை பகிர்வோம். நம்மால் முடிந்த துணி, பட்டாசு, இனிப்புகளை இல்லாதவர்களுக்கு கொடுப்போம். அருகில் இருக்கும் வேற்று மத நண்பர்களை அன்பாக இழுத்து வந்து நம் கொண்டாட்டத்தில் வி.ஐ.பி.யாக்கி மகிழ்வோம். விட்டு போயிருந்த உறவுகளை நாமே தேடிச் சென்று பண்டிகையை காரணம் காட்டி நம்மோடு சேர்த்துக் கொள்வோம். //

அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். அனைவரோடும் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடப் படவேண்டிய பண்டிகை.

உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வானம்பாடிகள் October 16, 2009 at 4:30 PM  

உண்மையாகவே தெரியாத தகவல்கள்தான். பாராட்டுக்கள்.
/அருகில் இருக்கும் வேற்று மத நண்பர்களை அன்பாக இழுத்து வந்து நம் கொண்டாட்டத்தில் வி.ஐ.பி.யாக்கி மகிழ்வோம். விட்டு போயிருந்த உறவுகளை நாமே தேடிச் சென்று பண்டிகையை காரணம் காட்டி நம்மோடு சேர்த்துக் கொள்வோம்/

நல்ல பழக்கம்.

நன்றிங்க பகிர்ந்தமைக்கு. தீபாவளி வாழ்த்துகள்.

சுசி October 17, 2009 at 1:04 AM  

அருமையான தகவல்கள். கடைசியில் நீங்கள் சொன்ன விஷயம் சூப்பர்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Bala,  October 19, 2009 at 9:20 AM  

ya its true.Nice information

இது நம்ம ஆளு October 19, 2009 at 2:29 PM  

நன்றி
Bala,சுசி, வானம்பாடிகள், இராகவன் நைஜிரியா, muthu,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP