உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

15 October 2009

தீபாவளி கொண்டாடினார் அதிபர் ஒபாமா !நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கொடியவன் நரகாசுரனை கொல்லப்பட்ட மகிழ்வை இந்து, சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் தீபத்திருநாளாக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக மக்கள் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகர வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் , கூட்டமாக பர்சேஸ் செய்து வருகின்றனர். குழந்தைகள் பட்டாசு கடைகளை மொய்க்க துவங்கி விட்டனர்.

அமெரிக்காவில் இதுவரை நடக்காத இனிய செய்தி


இந்நிலையில் இது வரை இல்லாத விஷயமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்தார். இவ்விழாவில் ஒபாமா நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற இந்திய அதிகாரிகள், இந்திய சமூக பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடினர் . விழாவில் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இத்திருநாள் குறித்து ஒபாமா கூறுகையில் ; இந்து , சீக்கியர், ஜெயின். மற்றும் புத்த இனத்தவர்கள் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். கொடியவரை வீழ்த்திய மகிழ்வில் கொண்டாடடும் நாள் . வெற்றியின் அடையாளமாகவும், அறிவின்மை என்ற இருளை அகற்றி ஒளியேற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இது கொண்டாட்ட தருணம் மட்டுமல்ல. நம்மில் பலர் ஏழைகளாகவும் , இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களை நினைத்து இத்திருநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

5 கருத்துக்கள்:

muthu,  October 15, 2009 at 2:52 PM  

Fantastic news
keep it up!
my wishes to you!

SUREஷ் (பழனியிலிருந்து) October 15, 2009 at 3:23 PM  

//அமெரிக்காவில் இதுவரை நடக்காத இனிய செய்தி//

ஆஹா

வானம்பாடிகள் October 15, 2009 at 5:07 PM  

தீபாவளி வாழ்த்துகள்

சுசி October 15, 2009 at 11:11 PM  

புதிய தகவல்.
உங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous,  October 16, 2009 at 6:51 PM  

இவனுக்கு வேற வேலை இல்லை ... போன மாசம் ரம்ஜான் கொண்டாடினான் ... இந்த மாசம் தீபாவளி ... இனி ஓணம் .. அப்புறம் கிறிஸ்துமஸ் ..அப்புறம் பொங்கல் ... இவனுக்கு நோபல் பரிசு வேற...

Enjoy Obama!!

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP