மகாத்மா !
உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஓர் ஆச்சரியமான விஷயம் தென்படுகிறது. 6 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தத்துவ ஞானியோ, சமுதாய வழிகாட்டியோ உலகில் தோன்றியவண்ணம் இருப்பதுதான் அந்த ஆச்சரியமான விஷயம். கி.மு. 6-வது நூற்றாண்டில் கௌதம புத்தர் தோன்றியதைத் தொடர்ந்து 6 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றியவர்கள்தான் இயேசுநாதர், நபிகள் நாயகம், ஆதிசங்கரர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர்.
இன்று காந்தி ஜயந்தி 02 அக்டோபர்.
காந்தியடிகளின் தீண்டாமைப் பிரசாரத்தின் வெற்றிதான் இன்றைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் எழுச்சிக்கே அடிப்படைக் காரணம் என்பதை யார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரித்திரம் உணர்த்தும். காந்தியடிகளின் தீர்க்கதரிசனம் எத்தகையது என்பதற்கு அவர் தனது தொண்டர்களுக்குப் போதித்த எளிமையான வாழ்க்கை முறையும் சேவை மனப்பான்மையுடன் கூடிய சமுதாயப் பணியும் கட்டியம் கூறுகின்றன.
\
"கிராமராஜ்யம்'தான் காந்தியடிகள் கண்ட "ராமராஜ்யம்'.
தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகள் இருந்த போது தமிழ் மொழியை கற்கத் தொடங்கினார். "தமிழ் மொழியைக் கற்கும் போது அதன் அழகை அறியலானேன்' என்றும், "தமிழ் மொழி உள்ளம் கவரும் ஓர் இனிய மொழி' என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டதற்கு காரணம் திருக்குறள். "நான் திருக்குறளின் மூலத்தை நேராக கற்க வேண்டுமென ஆசைப்பட்டேன். இது, எனது மனதில் ஆழமாக பதிந்தது. எனவே, தமிழ் கற்கத் துவங்கினேன்' என்றும் கூறியுள்ளார். இந்தியா ஒன்றுபடுவதற்கு தமிழர்கள் இந்தி மொழியை கற்பது மட்டும் போதாது. சென்னை ராஜ்யத்திற்கு வடக்கே உள்ளவர்களும் தமிழை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது காந்தியின் கருத்து.
"மகாத்மா' குறித்து காந்தி கூறியது: மகாத்மா என்னும் பட்டத்தை நான் மதிக்கவில்லை. பல சமயம் இப்பட்டம் எனக்கு மனத்துன்பத்தை தந்துள்ளது. எக்காலத்திலும் அப்பட்டத்தினால் நான் பெருமைப்பட்டுக் கொண்டதாக ஞாபகமில்லை. என்னை மகாத்மா எனக் கூறி பனிப்பாங்கான இமயமலையின் சிகரம் வரை ஏற்றி வைத்துவிட்டு, இவ்வளவு மாபெரும் மகாத்மாவின் போதனைகளைப் பின்பற்றுவது என்ன முடிகிற காரியமா எனக்கூறி என் காலை வாரி விடப்பார்க்கிறீர்களா... பொருட்காட்சி சாலையில் வைத்துள்ள ஒரு ஜந்துவின் நிலையில் தான் உள்ளேன். இவ்வாறு காந்தி கூறியுள்ளார்.
மானுடம் தழைக்க வேண்டுமானால் காந்தியம் வெல்ல வேண்டும். காந்தியம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல, காரணம், அது ஒரு சத்தியசோதனை!
3 கருத்துக்கள்:
அருமையான காலத்திற்கு தேவையான பதிவு! நன்றியுடனான வாழ்த்துக்கள்!
மானுடம் தழைக்க வேண்டுமானால் காந்தியம் வெல்ல வேண்டும். காந்தியம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல, காரணம், அது ஒரு சத்தியசோதனை!
சத்தியமான வார்த்தை.
நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
Post a Comment