கிருஷ்ண ஜெயந்தி !
மதுராவில் பிறந்த கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், தனது தாய் மாமனான கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான்.
தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.
தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.
தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் பரமாத்மா.
கீதை அருளிய கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி.தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார்.
நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் கதை, தாமரை தாங்கி, மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி அணிந்து சகலவிதமான ஆபரணங்களையும் அணிந்துகொண்டு தோன்றினார். பின்னர் தேவகியின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன்னைச் சிறு குழந்தையாக உருமாற்றி பாலகிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம் செய்கிறார்.
பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகம் தோறும் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.
""ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே'' என்னும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய பகவானின் திருநாமத்தை குறைந்தபட்சம் 108 முறை உச்சரித்தால் ஒருவர் இக்கலியுகக் கேடுகளில் இருந்து விடுபடுவதுடன் கிருஷ்ணரின் பூரண அருளைப் பெற்று வாழலாம்.
வாழ்த்துகள்!
பகவான் பேசுவதில்லை,பக்தியும் குறைவதில்லை!
2 கருத்துக்கள்:
அழகான படங்களோட இன்னும் அழகா எழுதி இருக்கீங்க.
நன்றி சுசி,
Post a Comment