ரம்ஜான் - "பித்ரா' !
முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா!
நபிகள் நாயகம் அவர்களிடம், ஒருவர் வந்து, "இறைத்தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?' என்று வினவினார். இறைத்தூதர் அவர்கள், ஒரே வார்த்தையில் விடை அளித்தனர். "பசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்!' "அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று, அண்ணலார் ஓங்கி முழங்கினார். இதே வழிகாட்டுதல் தான், ரம்ஜான் மாதத்திலும் பளிச்சிடுகிறது. "ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்!' "ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்!' "இறை வழியில் தானதர்மங்களை வாரி வழங்குங்கள்!' "வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்!' இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.
பெருநாளன்று, யாரும் பசி பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது. அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளனர்.
பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக, "பித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில் ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப் பதாக வைத்து கொள்வோம். ஆறு பேருக் கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.
ஓர் ஆண்டில் ரம்ஜான் எனும் மாதம், திருக்குர் ஆன் வழங்கப்பட்ட அல்லாவிடமிருந்து அருளப்பட்ட மாதம் முழுவதும் நோன்பு இருந்து, ஷவ்வால் பிறை தெரிந்ததும் பெருநாள் எனும் திருநாளை, ஏழை எளிய மக்களுக்கு, "பித்ரா' எனப்படும் தர்மத்தை வழங்கி, அவர்களும் ரம்ஜான் பெருநாள் கொண்டாட வழி வகுத்தனர்.
ஏழைகள், பணக்காரர்கள் பேதமின்றி இந்த ரம்ஜான் பண்டிகையை எல்லாரும் கொண்டாடுவோம்.
8 கருத்துக்கள்:
எத்துணை கருணை. என்ன ஒரு உயர்ந்த நோக்கு. நன்றி மீண்டும், நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு.
நல்ல தகவல்கள்
புதிதான தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி...
happy ramzan
நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துக்கின்றேன் ஏற்றுக்கொள்ளவும் .
http://kklogan.blogspot.com/2009/09/blog-post_21.html
நன்றி
Anonymous, சுசி,SUREஷ் (பழனியிலிருந்து),வானம்பாடிகள்,
நன்றி
Loganathan,
வரம் தரும் தேவதயை என்னிடம் அனுப்பியதற்கு !
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp
யூத்ஃபுல் விகடனில் இந்த இடுகை தேர்வானமைக்கு வாழ்த்துகள்
Post a Comment