உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

25 May 2011

ஆணவம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், “என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?” என்று கேட்டார்.“நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?” என்று வினவினார் பரமஹம்சர். “இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த ஸித்தி கைவரப் பெற்றேன். உங்களால் நீரில் நடக்க இயலுமா?” என்று பெருமிதத்துடன் கேட்டார் யோகி.அவரைப் பார்த்து புன்னகைத்தார் பரமஹம்சர். “அப்பனே, அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கங்கையின் அக்கரைக்கு செல்ல விரும்பினால் படகுக்காரனிடம் இரண்டு பைசா கொடுத்தால் போதும். அவன், என்னை அக்கரையில் கொண்டுபோய் விடுவான். 18 ஆண்டுகளை வீணாக்கி நீ சம்பாதித் யோக சக்தி, இரண்டு பைசாவுக்குத்தான் சமம். வேண்டாத இந்த விளையாட்டில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை!” என்றார்.நாம் எந்தச் செயலை செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதை செலுத்தி, முழுமையான அர்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். ‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்கிறார் கீதையில் வழிகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

படித்ததில் பிடித்தது...


Read more...

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP