அ(ஆ)சை - வம்(பு ) !
அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும்.
பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.
மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை.
எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
5 கருத்துக்கள்:
தலைப்பிலேயே அசத்திட்டீங்க. ப்ரமாதம். எங்க சார் காணோம்.
இதுக்குத்தானா அது... அதானே முன்னோர்கள் காரணமில்லாம எதையும் சொல்ல மாட்டாங்க.
உங்கள என் பதிவில ஒரு தொடர் பதிவுக்கு கூப்டிருக்கேன்... வந்து கலந்துக்குங்க.
Good message
nice one.
super
Post a Comment