6ல் சாவு , 100ல் சாவு !
குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.
அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார்.
அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.
ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.
கர்ணன் கூறியதுதான் பழமொழிக்கு(ஆறிலும் சாவு, நூறிலும் சாவு ) உண்மையான பொருள்.
கர்ணன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேஷன் நடித்த கர்ணன் படம் தான்.கர்ணனின் வாழ்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ஒரு பிரமிப்பை படைத்தது வாழ்ந்து இருப்பார்.அந்த இறுதி காட்சி நம் கண்களை விட்டு அகல மறுக்கும் படம் முடித்த பிறகும்.
பதிவுகள் தொடரும் ...
7 கருத்துக்கள்:
good information
Keep it up
Really first class film i loves ever !
சிவாஜி நடிப்பு அற்புதம். பழமொழி விளக்கம் புதுமை. நன்றி
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது...
என்னே ஒரு அருமையான பாட்டு... இன்றும் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.
மிக அழக்கான இடுகை.
நல்ல இடுகை.... கர்ணனும் நடிகர் திலகமும் என்னைக்கும் பிரிக்க முடியாதவங்க.
//கர்ணன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேஷன் நடித்த கர்ணன் படம் தான்.கர்ணனின் வாழ்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ஒரு பிரமிப்பை படைத்தது வாழ்ந்து இருப்பார்.அந்த இறுதி காட்சி நம் கண்களை விட்டு அகல மறுக்கும் படம் முடித்த பிறகும்.
//
I agreed !
//கர்ணன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேஷன் நடித்த கர்ணன் படம் தான்//
கூகிள்ல சர்ச் பன்னினா என்ன வருது?
பிளாக் ஹெட்டர் படம் சூப்பர். பாரதி + தேசிய கொடி பிரமாதம். வாழ்த்துக்கள்
Post a Comment