சிந்தனை-செய் !
மீன்கொத்திப் பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திரு. அது நீருக்குள் மூழ்குகின்ற போது சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர் அகன்று விடுகிறது.
அதுபோல் உலக வாழ்க்கையில் பற்றற்றவராய் இருங்கள். பணபலம் உடையவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த நலனுக்கு மட்டுமல்லாது தங்களுக்குத் தெரிந்து கஷ்டப்படுகின்ற மக்களுக்கும், பிணியால் வாடும் நோயாளிகளுக்கும் உதவி புரிவதைத் தங்களின் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.
உலகைப் படைத்த இறைவனே அனைத்துமாய் இருக்கிறான் என்ற மெய்ஞ்ஞானம் வரும் வரையில் மனிதனுக்குப் பிறவிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.வெறும் படிப்பால் மட்டுமே பயன் ஒன்றும் விளையாது.
கற்பது என்பதே கடவுளைப் பற்றி அறிவதற்கான உபாயம் என்பதை உணர்ந்து கற்க வேண்டும்.மற்ற படிப்பெல்லாம் வெறும் உலகியல் கல்வியாகும்.
கடவுளை அறிவது என்பது என்றென்றும் உறுதுணையாய் நம்முடனே வரும்.தெய்வீகப் படங்களை, நமது அறையில் கண் பார்வையில் படும்படி மாட்டி இருப்பது நல்லது. ஏனென்றால் நாம் காணுகின்ற காட்சியினால் மனம் நல்ல அருள் உணர்வுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும்.
படித்ததில் பிடித்தது...
4 கருத்துக்கள்:
எங்களுக்கும் படிக்க நல்ல கருத்துக்களை தந்ததுக்கு நன்றி.
நல்ல கருத்துங்க. நன்றி. உங்கள் இடுகையைப் படிப்பதும் கூட இதில் சேர்த்தி.:)
நன்றி
வானம்பாடிகள்,
நன்றி
susi,
Post a Comment