இப்படியும் சிலர் !
முன்பெல்லாம் ஜெர்மனியர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. புதிதாக திருமணமான ஜோடிகளின் வீட்டின் முன் ஒரு சிறிய செடி நடப்படுகிறது. குழந்தை பிறந்தவுடனும் ஒரு செடி நடப்படுகிறது. இவர்கள் குழந்தையின் தலையெழுத்து இந்தச் செடியின் வளர்ச்சியைப் பொருத்தே அமையும் என நம்புகின்றனர்.
----------------------------------------------------------------------------
ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற இடத்திலுள்ள பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக கூளிங்கிளாஸ் அணிய வேண்டும். இது சூரியனில் இருந்து வருகின்ற அல்ட்ரா வைலட் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கிறது. கண்ணாடி அணிவதால் சூரிய ஒளியிலிருந்தும், கேட்ராக் நோயிலிருந்து குழந்தைகளின் கண்களை பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர் பள்ளி நிர்வாகிகள்.
----------------------------------------------------------------------------------
ஆஷ்லிக் மோரிஸ் என்பவரால் நீச்சல் அடிக்க முடியாது. ஷவரில் குளிக்க முடியாது. ஏனென்றால், அவருக்கு தண்ணீர் என்றால் அலர்ஜி. இவருடைய வியர்வையே இவருக்கு அலர்ஜியாக மாறி விடுகிறது. குணப்படுத்த முடியாத இந்த நோய் இவரது 14ம் வயதில் இருந்து வந்தது!
3 கருத்துக்கள்:
புதிய தகவல். :)
இங்கும் கூட குளித்தால் சளிப் பிடிக்கும் என்று சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்
நன்றி
SUREஷ் (பழனியிலிருந்து)
வானம்பாடிகள்,
Post a Comment