உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

04 September 2009

சிவ - விஷ்ணு இணைப்பு!
தசரதர் இறந்த போது, காட்டில் ராமர் இருந்ததால் தந்தைக்கு இறுதி கடன் செய்ய முடியவில்லை. ஆனால், ஜடாயு என்ற கழுகுக்கு அவர் இறுதி கடனைச் செய்தார். சீதையை, ராவணன் கடத்திச் சென்ற போது ஜடாயு தடுத்தது. அதை தன் வாளால் வெட்டிக் கொன்றான் ராவணன். ஆனால், அது இறக்கும் முன் சீதை கடத்தப்பட்டதை ராமனிடம் சொல்லிவிட்டே உயிர் விட்டது. அந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஜடாயுவிற்கு இறுதிக் கடன் செய்தார் ராமர்.
--------------------------------------------------------------------------------சிவபெருமானுடைய பஞ்சாட்சரமாகிய, "நமசிவாய' என்ற மந்திரத்தில் உயிர் போன்ற முக்கிய எழுத்து, "ம!'

அதுபோல் விஷ்ணுவின் அஷ்டாட்சர மந்திரத்தின் உயிர் போன்ற முக்கிய எழுத்து, "ரா!' இந்த, ம, ரா ஆகிய இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தது தான், "ராம' என்ற மந்திரம். சிவன், விஷ்ணு இரண்டும் சேர்ந்த அற்புத சக்தி வாய்ந்த நாமம், ராம நாமம்.

--------------------------------------------------------------------------------------காசிக்குச் சென்று ஒரு சிவயோகியிடம் தீட்சை பெற்றார் முத்துசுவாமி தீட்சிதர். அப்போது, கங்கையிலிருந்து மேலே


ஒரு வீணை தோன்றியது. அதை கையில் எடுத்து வணங்கி, கங்கா தேவியின் ஆசீர்வாதமாகப் பெற்றுக் கொண்டார்


முத்துசாமி தீட்சிதர். அந்த வீணையில் ராமநாமம் பொறிக்கப்பட்டிருந்தது.

ராம் ராம் !

4 கருத்துக்கள்:

உலவு.காம் (ulavu.com) September 4, 2009 at 11:53 AM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

வானம்பாடிகள் September 4, 2009 at 12:13 PM  

எங்கிருந்து சார் தினம் வித விதமா புது புது உபயோகமான தகவல் தறீங்க. சின்னதா, அழகா படிச்சதும் ஒரு சின்ன சந்தோஷம். இன்னைக்கு இது தெரிஞ்சிண்டோம்னு. பாராட்டுக்கள்.

சுசி September 5, 2009 at 5:03 AM  

அழகான படங்களோட அருமையான பதிவு.

இது நம்ம ஆளு September 7, 2009 at 10:02 AM  

நன்றி

வானம்பாடிகள்,
சுசி,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP