விடு - கதை !
இன்று விடுகதைகள் பற்றிய சிறிய தொகுப்பினை பார்போம்
1.ஆட்டத்தில் அசர வைப்பான்,பாம்பை மட்டும் அலற வைப்பான். அவன் யார்?
2.ஆற்றையும் கடக்கும், அக்கரைக்கும் போகும்; தண்ணீரையும் கலக்காது, தானும் நனையாது. அது என்ன?
3.ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
4.ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு படி நீர். அது என்ன?
5.திரியில்லாத விளக்கு தினமும் எரியுது. அது என்ன?
விடைகள்
இதில் உள்ள புகைப்படங்கள் தான் மேலே குறிபிட்டுள்ள விடுகதைகளுக்கு விடை.
ஆனால் புகைப்படங்கள் வரிசையாக இல்லை.நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன கண்டுபிடித்து விட்டீர்களா ?
பதிவுகள் தொடரும்
6 கருத்துக்கள்:
1.மயில்
2.குரல்.
3.சிறுநீர்
4.இளநீர்
5.சூரியன்
சரிங்களா
நல்ல தொகுப்புங்க... :) வாழ்த்துக்கள்!!
மயில்
சத்தம்
கண்ணீர்
இளநீர்
சூரியன்
ம்.... சரியா???
விடைகள்
1.மயில்
2.குரல்.
3.கண்ணீர்
4.தேங்காய்
5.சூரியன்
நன்றி
"பிரியங்கா",
சுசி,
வானம்பாடிகள்,
nice
Post a Comment