உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

11 August 2009

பன்றிக் காய்ச்சல் - வராமலும் தடுக்க முடியும்


இப்பொழுது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் மக்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் அதிகப்படுத்தி வருகிறது. இந்நோய் கட்டுப்படுத்தக் கூடியது, வராமலும் தடுக்க முடியும் என வடக்கு கரோலினாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, நோய் கட்டுப் பாட்டு மையம் (சி.டி.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது பரவி வரும், பன்றிக் காய்ச்சல், புதிய வகையான இன்ப்ளூயன்சா "ஏ' வைரசால் பரவுகிறது. இதை "எச் 1 என் 1 வைரஸ்' என்று அழைப்பதும் உண்டு. வைரஸ் வகைகளில் உட்பிரிவுகள் உள்ளன. ஒரு வைரஸ் மனிதனிலும், மற்றொரு வைரஸ் பறவைகளிலும், இரண்டு வைரஸ் பன்றிகளிலும் காணப்படுகிறது.


இதில், பன்றிகளில் காணப்படும் வைரசால் பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது. இது பன்றியில் இருந்து மனிதனுக்கும், பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் (எச்1 என்1 வைரஸ்) கடந்த மார்ச் மாதங்களில், மெக்சிகோவின் பல பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. தற்போதும் மெக்சிகோவில் தான் அதிகளவாக, 727 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அங்கு இதுவரை 26 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.


அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 403 பேரில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பன்றிக் காய்ச்சல் நோய், ஒரு மனிதரில் இருந்து மற்றொரு மனிதருக்குக் காற்று மூலமாகப் பரவுகிறது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மனிதரின் இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றால், காற்றில் அந்த வைரஸ் பரவி, மற்ற மனிதருக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி, லேசாகவே தென்படுகிறது.


ஆனால், வேறு வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் முதியவர்கள் ஆகியோருக்கே இதன் பாதிப்பு கடுமையாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கும் என சந்தேகப்படுபவர்கள் மற்றும் அதன் அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர், பரிசோதனையின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டது. பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சை:


பன்றிக் காய்ச்சல் நோய், ஆன்டி-வைரல் மருந்துகளால், எளிதில் குணப்படுத்தக் கூடியது. பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்பட்ட இரண்டு நாட்களிலேயே சிகிச்சையைத் தொடர்ந்தால், மருந்து சிறந்த பலன் அளிக்கும். பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சையில், "டாமி ப்ளூ' மற்றும் "ரிலன்சா' ஆகிய இரண்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், "டாமி ப்ளூ' ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், "டாமி ப்ளூ' எடுத்துக் கொண்டு சரியானபின் ஒருவருக்கு ஆறுமாதம் கழித்து இன்புளூயன்சா போன்ற காய்ச்சல் ஏற்பட்டால், இந்த "டாமி பளூ' எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விடும்.


அதனால் தான் "டாமி ப்ளூ' வை சிறந்த மருத்துவ ஆலோசனையில் பயன்படுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. "ரிலன்சா' என்பது இன்ஹேலர் ஆகும். பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நோயின் அறிகுறிகள் மற்றும் தன்மைக்கேற்ப, இந்த இரண்டு மருந்துகள் வழங்கப்படும். பன்றிக் காய்ச்சல் தடுப்பு: எந்த ஒரு நோயும் வராமல் தடுப்பதே சிறந்தது. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்த்தல், பன்றிக் காய்ச்சல் நோயாளியுடன் பேசும் போது, சர்ஜில் மாஸ்க் அணிந்து கொள்ளுதல், இருமல் மற்றும் தும்மல் ஏற்பட்டால், வாய் அல்லது மூக்கை மூடிய நிலையில் இருமிய பின் கைகளை நன்கு கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
பிரஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். இவை, உயர்தரமான புரோட்டீன்கள், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை அளித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, மூலிகை மருத்துவம் உட்பட பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளன. சீன மருத்துவத்தில், அனைத்து வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றிற் கும், ரேய்ஷி காளான் பயன்படுத் தப்படுகிறது. இந்தக் காளானில் அதிகளவில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்கள், சுவாசப் பிரச்னைகளை நீக்குகிறது.


பூண்டும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் தடுக்கிறது. இதுகுறித்து வடக்கு கரோலினாவைச் சேர்ந்த டாக்டர் லிசா போர்ஜியான் கூறுகையில், "பன்றிக் காய்ச்சல் குறித்துப் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தக் கூடியது; எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடியது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு ஆகியவற்றின் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம்' என்றார்.


எல்லாம் அவன் செய்யல் !

நோய் தடுப்போம் ! நலமாக வாழ்வோம் !

3 கருத்துக்கள்:

பிரியங்கா August 11, 2009 at 3:23 PM  

நல்ல பகிர்வுங்க... :) நன்றி..

இராகவன் நைஜிரியா August 11, 2009 at 4:44 PM  

வரும் முன் காப்பது சிறந்தது எந்த நோயாக இருந்தாலும்.

இது நம்ம ஆளு August 12, 2009 at 9:25 AM  

வரும் முன் காப்பது சிறந்தது
நல்ல பகிர்வுங்க... :

நன்றி பிரியங்கா & இராகவன் நைஜிரியா

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP