ராகிங் - இனி அவ்ளவு தான் !
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்களை ஒழிப்பது தொடர்பான விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உருவாக்கியுள்ளது.
ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு என்ன தண்டனைகள் வழங்கப்படும்?
*கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ்.அந்த மாணவர்கள் வேறு கல்லூரியில் குறிப்பிட்ட காலத்திற்கு சேர முடியாத வகையில் நடவடிக்கை.
*கல்லூரி சேர்க்கையை ரத்து செய்வது.
*அவர்களுக்கு அளித்த கல்வி உதவித் தொகையைத் திரும்பப் பெறுவது.
*விடுதியில் இருந்து வெளியே அனுப்புவது.
*தேர்வில் பங்கேற்காமல் செய்வது மற்றும் தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது.
*ஒரு செமஸ்டர் முதல் 4 செமஸ்டர் வரை தாற்காலிகமாக நிறுத்திவைப்பது.
*கல்வி நிறுவனம் சார்பில் வெளி இடங்களில் நடைபெறும் விளையாட்டு, விழாக்கள் போன்றவற்றில் இருந்து நீக்குவது.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத கல்லூரிகள் மீது நடவடிக்கை ?
*கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
*அந்த கல்லூரிகளின் மாணவர்கள் பட்டச் சான்றிதழ் பெறுவதைத் தடை செய்யப்படும்
*யு.ஜி.சி.-யில் இருந்து கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியுதவி நிறுத்தி வைக்கப்படும்.
*மேலும், அத்தகைய கல்லூரிகள் குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று பொதுமக்களிடம் பிரகடனம் செய்யப்படும்.
ராக்கிங்கை தடுக்க:
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் பயன்படுத்தும் தனியார் விடுதிகள், லாட்ஜ்கள் போன்றவை பற்றிய தகவலை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் மாணவர்களும் தங்கள் இருப்பிடம் குறித்த விவரத்தை தங்கள் கல்வி நிறுவனத்தில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கல்வி நிறுவனத் தலைவர், சிவில் மற்றும் போலீஸ் நிர்வாக பிரதிநிதிகள், உள்ளூர் ஊடகம், அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ராகிங் எதிர்ப்பு குழுவை உருவாக்கிச் செயல்பட வேண்டும்.
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் முதல் 3 மாதங்களுக்கு தாங்கள் மேற்கொண்ட ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு வார அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகைய அறிக்கையை துணை வேந்தர்கள் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த மேற்கொண்ட விதிமுறைகள் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இப்போது அனுப்பப்பட்டுள்ளது.
0 கருத்துக்கள்:
Post a Comment