வங்கிகள் - ஸ்டிரைக் ?
ஊதிய உயர்வு, வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை, ஊனமுற்றவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கிப் பணியாளர்கள் சங்கத்தினர், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் எந்தவிதமான உடன் பாடுகளும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தது போல், இன்றும்(06/08/09), நாளையும்(07/08/09) அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்பட தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் மற்றும் சில தனியார் வங்கிகளை சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். கிளார்க்குகள், கேஷியர்கள், கிளை நிர்வாகிகள் என அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் வங்கி பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்குவதால், ஏ.டி.எம். சேவை, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பணத்திற்காக வங்கிகளை நாடும் மக்கள், ஏ.டி.எம்., மையங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மையங்களில், ஒரே நாளில் பணம் தீர்ந்துவிடும் என்பதால், ஏ.டி.எம்., சேவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதனிடையே ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி, ஆக்சிஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று வங்கி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
2 கருத்துக்கள்:
2 நாளா.. தாங்காதப்பா... தாங்காது.
உபயோகமான விரைவான பதிவு. நன்றிங்க.
நன்றி D.R.Ashok,
உண்மை தான்
Post a Comment