நகைகள் - சில தகவல்கள்
நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
நகைகள்:தங்கம்,வெள்ளி,முத்து மற்றும் கற்கள் பதித்த நகைகள்
நகைகளை பாதுகாப்பது எப்படி? சில தகவல்கள்!
நாம் அன்றாடம் அணியும் செயின்,தோடு,மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து விடும்.இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும்.பின் இவற்றை நீராவியில் காண்பித்தால்,அழுக்குகள் நீங்கி,பளபளவென்று ஜொலிக்கும்.
தங்க நகைகளை, பூந்திக் கொட்டை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.
தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும்.
தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.
வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
மிதமாக சுடவைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊறவைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்
வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்
முத்து நகைகளை பயன்படுத்தாதபோது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும்.
முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக் கூடாது.அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும்.முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.எனவே,ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும்.
கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
பதிவுகள் தொடரும் ...
4 கருத்துக்கள்:
நல்ல பதிவு, புதிது மங்காமல் இருக்கும் நகைகளைக் கூட மாற்ற வேண்டும் அடம் பிடிப்பவர்களை என்ன செய்வது தல..,
பயனுள்ள தகவல். பகிர்தலுக்கு நன்றி.
பயனுள்ள தகவல். பகிர்தலுக்கு நன்றி.
நன்றி பாலா...,
நல்ல பதிவு, புதிது மங்காமல் இருக்கும் நகைகளைக் கூட மாற்ற வேண்டும் அடம் பிடிப்பவர்களை என்ன செய்வது தல..,
SUREஷ் (பழனியிலிருந்து)நன்றி என்ன செய்வது ? :)
Post a Comment