அத்திக் காய் ! :)-
இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயை சாப்பிடுவதன் மூலம் நலம் பெறலாம்.அத்திக்காயை பொறியல் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் அளிக்கும்.
தினசரி சாப்பிட முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது அத்திகாயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றது.
அத்திப்பழத்தில் செய்யப்படும் அடை கஞ்சி காமாட்சியம்மன் கோயில் நெய்வேத்ய பூஜையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
அத்திக் காய்க்கு உள்ள துவர்ப்பு சக்தி காரணமாக சித்த வைத்தியத்தில் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.துவர்ப்பு சுவைக்கு ரத்த சுத்திகரிப்பு, நரம்புகளை சிறப்பாக இயங்க வைப்பது உள்ளிட்ட சக்தி உள்ளது.
அதர்வண வேதத்தில் அத்திக்காய் அப்பத்தை யாகத்தில் இடும் போது அதீத பலன் கிடைக்கும். அத்திக்காயை மாமிசத்திற்கு இணையான, மிக வலிமையான பொருளாக அதர்வண வேதம் கூறுகிறது.
வீடுகளில் தோஷம் ஏற்பட்டாலும், வீட்டின் பின்புறம் தென்திசையில் அத்திக்காய் மரத்தை வளர்த்தால் பலனளிக்கும். தியானம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசனங்களை (அமரும் பலகை) அத்தி மரத்தில் செய்வதன் மூலம் தியானத்தின் சக்தியும், மன ஒருமுகத்தன்மையும் அதிகரிக்கும். அத்தி மரத்திற்கு அந்த சக்தி உள்ளது.
கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும் என்பது அத்திக்காய் பற்றிய பழமொழி
9 கருத்துக்கள்:
ரைட் கிளிக் விட்டாத்தான் பின்னூட்டத்தில் மேற்கோள் காட்ட முடியும் தல
பழமொழி கொஞ்சம் ஆபாசாமா தெரியல
இவ்ளோ தூரம் சொல்லிட்டு யாகக் குண்டத்தில் போடச் சொல்லுறீங்களே தல,,,,
இவ்வளவு இருக்கா அத்திகாயில?
தகவலுக்கு நன்றிங்கண்ணா..
நல்ல இடுகை நன்றிகள் நண்பரே....
நல்ல தகவல் பாரதியாரே.
இங்க கூட அத்திப் பழம் மாதிரி ஒண்ணு கிடைக்கும். ஆனா பயத்தில இதுவரை வாங்கல.
SUREஷ் (பழனியிலிருந்து),
பழமொழி கொஞ்சம் ஆபாசாமா தெரியல
பெரியவரகள் சொன்னது
வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி - கலையரசன்,சந்ரு
இங்க கூட அத்திப் பழம் மாதிரி ஒண்ணு கிடைக்கும். ஆனா பயத்தில இதுவரை வாங்கல.
டாக்டர் இப்படி சொன்ன ?எப்படி ?
வருகைக்கு நன்றி சுசி.
Post a Comment