உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

26 July 2009

குழந்தை - மூளை வளர்ச்சிக்கு?


கருவில் இருக்கும் குழந்தை ஆறு மாதத்தை தாண்டும்போது கேட்கும் திறனை பெற்று விடுகிறது. கருவுற்றிருக்கும் தாய் பயன்படுத்தும் வார்த்தைகள், இசை உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் எழும் சத்தங்களும் கருவில் இருக்கும் குழந்தையின் மனதில் பதியத் துவங்கி விடுகிறது. இந்த காலகட்டத்திலேயே குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுத் தர வேண்டும்.
குழந்தைக்கு தாய்தான் முதல் ஆசிரியை. குழந்தை கருவில் இருக்கிறதே, அதற்கு என்ன தெரியப் போகிறது என்று நினைக்காமல், குழந்தை தன் எதிரில் இருப்பது போல் நினைத்து வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தை பிறக்கும் போது அதன் மூளை வளர்ச்சி 25 சதவீதம் மட்டுமே இருக்கும். இரண்டு ஆண்டுகளில் மூளை வளர்ச்சி ஒரு கிலோவாக அதிகரிக்கும். மூன்றாவது வயதில் ஒரு கிலோ 200 கிராம் என்ற எடையும், ஆறு அல்லது ஏழு வயதில் ஒரு கிலோ 300 கிராம் எடையும் இருக்கும். பிறக்கும்போது குழந்தையின் கேட்டல், தொடுதல், சுவை, பார்வை உள்ளிட்ட ஐம்புலன்களும் இயங்கத் துவங்கி விடுகின்றன. ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிரில்லியன், 500 பில்லியன் தகவல்களை நமது மூளையில் சேமித்து வைக்க முடியும். 100 பில்லியன் நியூரான்கள் மூளையில் சிதறிக் கிடக்கின்றன. இவ்வாறு சிதறிக் கிடக்கும் நியூரான்களை இணையும் போது குழந்தையின் மூளைத்திறனும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.

துவக்கத்தில் குழந்தையின் மொழி என்பது "ஒளிப்படம்' தான். எனவேதான், தாயின் முகத்தை எளிதில் அடையாளம் கண்டு குழந்தை சிரிக்கிறது.குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகள் வரை "டிவி' பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

"டிவி'யில் பார்ப்பது... ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியை ஒரு வயது குழந்தை "டிவி'யில் பார்க்கிறது என்றால், அந்த காட்சி அப்படியே மூளையில் பதிந்து விடுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பின் கோபப்பட்ட நிலையில் இருக்கும் போது அரிவாள் அவனது கண்ணுக்கு தெரியுமானால் உடனே முன் "டிவி'யில் பார்த்த காட்சி அவன் முன் தோன்றும். அரிவாளை எடுத்து வெட்டலாம் என்ற எண்ணம் வலுப்பெற ஒரு வயதில் அந்த குழந்தை பார்த்த காட்சியே ஆதாரமாக அமைந்து விடுகிறது. இன்றைய நமது "டிவி' தொடர்களைப் பார்க்கும் குழந்தைகள் எந்த அளவு விஷத்தை தங்கள் மூளையில் பதித்துக் கொள்கின்றன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். நம் குழந்தை நம்மை விட புத்திசாலி என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்க வேண்டும். குழந்தையிடம் பேசும்போது தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும். நாம் எப்படி வார்த்தைகளை உச்சரிக்கிறோமோ அதைக் கேட்டு குழந்தை திரும்ப சொல்லும்.

குழந்தையிடம் வார்த்தைகளுடன் கூடிய படங்களை காட்டி உச்சரியுங்கள். உதாரணமாக, வாழைப்பழத்தின் படத்தையும், அதற்கு கீழ், அதைக் குறிக்கும் வார்த்தையும் இடம்பெற்ற படத்தைக் காட்டி குழந்தைக்கு சொல் லித் தருவீர்களானால், வாழைப்பழம் என்றால் எது என்றும், அதை எப்படி உச்சரிப்பது என்றும், அதை எப்படி எழுதுவது என்றும் குழந்தை எளிதாக தெரிந்துகொள்ளும். இதுபோன்ற தொடர் பயிற்சிகள் அளிக்கும்போது வாழைப்பழத்தை காட்டினால், அதன் பெயரை உச்சரிப்பதோடு, வார்த்தையால் எழுதிக் காட் டுவது வரை குழந்தையின் செயல்பாடு இருக்கும். இது போன்ற பயிற்சியை தொடர்வதன் மூலம் இயல்பாக படிக்கும் ஆற்றல் மூளையில் வளர்ந்துவிடும். படித்தல் என்பதை ஒரு கடமையாக, வேலையாகச் செய்ய வேண்டிய சூழல் இந்தப் பயிற்சி பெற்ற குழந்தைக்கு இருக்காது. குழந்தையின் கர்ப்ப காலம் தொடங்கி மூன்று வயதுக்குள் நாம் அளிக்கும் இதுபோன்ற பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு, புத்திசாலித்தனத் திற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த அடித்தளம் உள்ள எல்லாக் குழந்தையும் புத்திசாலி ஆகலாம்!

இந்தக் கட்டுரை - படித்ததில் பிடித்தது.

3 கருத்துக்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) July 26, 2009 at 10:07 AM  

// இதுபோன்ற தொடர் பயிற்சிகள் அளிக்கும்போது வாழைப்பழத்தை காட்டினால், அதன் பெயரை உச்சரிப்பதோடு, வார்த்தையால் எழுதிக் காட் டுவது வரை குழந்தையின் செயல்பாடு இருக்கும்.//

நல்ல விளக்கம் தல

Admin July 26, 2009 at 10:39 AM  

நல்ல பல விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...

இது நம்ம ஆளு July 27, 2009 at 12:17 PM  

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)& சந்ரு,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP