மூளை ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
வலிப்பு நோய், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... அடிக்கடி வருகிற தலைவலியும்கூட சில சமயங்களில் மூளையில் ஏற்படும் பிரச்னைக்கான அலாரம்தான். தொடர் தலைவலி என்றால் தவறாமல் டாக்டரிடம் காட்டிவிடுங்கள்!
மூளை தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் டாக்டரின் சிகிச்சையைவிட நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மிக முக்கியம். கோப,தாபங்களிலிருந்து விலகியிருக்கப் பழக வேண்டும், பொறாமை, பேராசை, வன்மம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை அண்டவே விடக்கூடாது!
அளவுக்கு மீறிய மன உளைச்சல் மொத்தமாக நரம்பு மண்டலத்தையும் ரத்த ஓட்டத்தையும் காவு வாங்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் உளைச்சலில் இருந்து ஓய்வு கொடுக்கும். நடப்பது நடந்தே தீரும் என்ற தத்துவார்த்த அணுகுமுறையை விழிப்பு உணர்வோடு கடைப்பிடிக்க ஆரம்பித்தால் பிரச்னைகளைப் பதறாமல் அணுக முடியும்!
சுறுசுறுப்பாக வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர்களை, போதும் உழைச்சது, சும்மா உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட் எடுங்க' என்று முடக்கிப் போடக்கூடாது. "சும்மா' என்பது மூளையைப் பொறுத்தவரை சைத்தான். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வைத்து, அதிலேயே மூழ்கடித்து, பல மன வக்கிரங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துவிடும்!
ஞாபக மறதி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கிற அளவுக்குப் போனால் உஷாராகிவிடுவது உத்தமம். அடுத்தவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிற அளவுக்கான ஞாபக மறதி என்பது மூளையில் ஏற்படும் ஏதோவொரு ரிப்பேரின் விளைவுதான்!
கூடுமானவரையில் பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ள முனையாதீர்கள். வெறும் குரல்கள் எப்போதுமே நம் மனப்பாங்கை எதிராளிக்கு முழுமையாகக் காட்டாது. தவறான புரிந்து கொள்ளுதலால் பரஸ்பரம் எரிச்சலும் விரக்தியும் அதிகமாகிப் போகும். மூளை சூடேறி வரிசையாகப் பல விளைவுகளை நம் உடலில் காட்டும்.
ஓய்வு பெற்றாலும் பிஸியாகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைதிக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களைப் போல் ஒரு நல்ல நண்பன் மூளைக்குக் கிடைக்கவே முடியாது. ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அது தொடர்பான புத்தகங்கள் மிகப் பெரிய வரப்பிரசாதம்!
மூளை, மனம் என்ற சித்தாந்தத்துடன் சம்பந்தப்பட்ட மருந்து.எனவே மனோரீதியான அணுகுமுறைகள் மூலமாக மூளையை அரோகியமாக வைப்பது சாத்தியம்.
பதிவுகள் தொடரும் ...
6 கருத்துக்கள்:
நல்ல கருத்துக்கள்.
Arumaya irukunga.
கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டிய பதிவுங்க. சாதாரண தலைவலியில் ஆரம்பிச்சது ஒரு உயிரையே பறிச்சுகிட்ட வலியை அனுபவிச்சவ நான்.
நல்ல பதிவு..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.இதோட 5212184546 ஆவது தடவையா வந்து பாக்கறேன். இந்த தமிழச்சியின் பின்னூட்டம் எங்கே?
கருத்துக்கள் கூறிய கக்கு - மாணிக்கம்,சுபா,தீப்பெட்டி,சுசி அணைவருக்கும் நன்றி.
வெளியூர் பயணம் மேற்கொண்டதால் இந்த தாமதம்.
Post a Comment