சர்க்கரை கொல்லுமா?
பெரும்பான்மை இந்தியர்களை பாதிக்கத்துவங்கியிருக்கும் இந்த இனிப்பு நோயின் கசப்பு உண்மைகளை இங்கு அறிவோம்.
நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை நாம் அறிய வேண்டும்.
உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரைநோய், இன்று இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
இதேவேளை, இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று எதிர்வு கூறுகிறார்க நீரிழிவு நோய் நிபுணர்கள்.
நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை இந்தியாவில் உருவாகிவருகிறதா என்பது சந்தேகமே?
பதிவுகள் தொடரும் ...
2 கருத்துக்கள்:
இங்க கூட இப்போ சமீபத்தில நடத்தின ஆய்வில குறிப்பா டீன் ஏஜ் பசங்க மத்தியில உடல் பருமன் அதிகமான தன்மை கூடியிருக்குன்னும், இது பின்னாடி நீரிழிவு வர காரணம் ஆகலாம்னும் சொல்லி இருக்காங்க. ஆனா இது குறித்த அக்கறை குறைவா இருக்குன்னுதான் சொல்லணும்.
சந்தேகமே?
:(
Post a Comment