நையாண்டியும், எகத்தாளமும்
ஆஸ்கார் ஒயிஸ்ட் - எழுத்தாளர்
இவர் நீதி, நேர்மை, சத்தியம், புண்ணியம். ஒழுக்கம். நம்பிக்கை. நட்பு, காதல் என்று பிறர் புனிதப்படுத்தும் அத்தனை விஷயங்களையும் பக்கம் பக்கமாகக் கிண்டலடிப்பவர்.
சிறிதளவு நேர்மை இருப்பது ஆபத்தானது. அதிகபட்ச நேர்மையுடன் இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும்.நல்ல அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது.
இது அவரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில வரிகள்.
ஆனால் தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார். "நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'
நையாண்டியும் எகத்தாளமும் நிரம்பி வழிந்தாலும், ஒயில்டின் எழுத்துகள் நிச்சயம் எதிர்மறையானவை அல்ல. ஓர் உதாரணம். இழந்துபோன என் இளமையை மீட்க எதையம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தவிர காலை சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது.'
என்ன ஒரு வித்யாசமான புகழ் பெற்ற எழுத்தாளர்!
பதிவுகள் தொடரும் ...
7 கருத்துக்கள்:
//நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'
//
என்ன கொடுமை தல இது
தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார்
இந்த வரிகள் அவருடய புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.
///ஆனால் தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார். ///
இது நம்ம சத்தியராஜ் மாதிரி ஆளு போல..
(வந்தாச்சு ஒட்டும போட்டாச்சு.. அழைப்புக்கு நன்றி )
//படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது//
உண்மையில் நெம்போ கஷ்டம்பா....
நான் இதுவரை இவரை படித்ததில்லை.. படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள். நன்றி
நன்றி Statistics,D.R.Ashok & Cable Sankar அவர்களே.
உங்கள் தொடர் கருத்துக்கள் இந்த பதிவுகளை மேலும் சிறப்படைய செய்யும் .
//அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது//
ரொம்ப நல்ல கொள்கை. (வெளங்கீரும்)
//"நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'//
ஏய் சுசி நீ நெனக்கிறத இவரு ஆட்டைய போட்டுட்டார்டி!!!!
இவர பத்தி அறிய வச்ச பாரதியாருக்கு ஒரு ஓ போட்டுக்கிறேன்.
Post a Comment