வாழ்க்கை?
"மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான் என்பது தெரியும். இந்த வாழ்நாளை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும்; அதற்கு தகுந்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எது பயனுள்ளது, எது பயனற் றது என்பதை பெரியோர் கூறியிருக்கின்றனர். தனக்குத் தேவை யானதை தார்மீக முறையில் சம்பாதிக்க வேண்டும். குடும்ப தேவை, தெய்வீக காரியங்கள், சொந்த பந்தங்களுக்கு உதவி செய்தல், ஓரளவாவது தான, தர்மம் செய்தல், போதுமே என்கிற திருப்தி... இப்படி வாழ்க்கை நடத்தினால் இகத்துக்கும் சுகம், பரத்துக்கும் சுகம் என்றனர். இப்படி இருக்க முடியுமா என்பது தான் பிரச்னை.
முதலாவதாக, "இது போதும்!' என்ற எண்ணம் வருகிறதா? பணம், பொருள் என்று வரும் போது, "இது போதும், இனி வேண்டாம்...' என்ற பேச்சே இருப்பதில்லை.
வேலைக்குப் போனால் சம்பளம் போதாது; வாடகை வீடென்றால், சொந்த வீட்டுக்கு ஆசை; சொந்த வீடு இருந்தால், இன்னும் கொஞ்சம் பெரிய வீடு மேல் ஆசை; பெரிய வீடாக இருந்தால், மாடி வீடாக இருந்தால் வாடகைக்கு விடலாமே என்ற ஆசை.
சைக்கிள் மேல் ஆசை. பிறகு ஸ்கூட்டர், கார் இப்படி ஒவ்வொன்றாக ஆசை! இதற்கு வரம்பே கிடையாது. "ஆமாம், சார்... ஏதோ இருக்கிறதை வெச்சுட்டு இதுவே போதும்ன்னு உட்கார்ந்துட்டிருந்தால் அது என்ன வாழ்க்கை சார். இந்த வாழ்நாளில் நாலு பேரைப் போல் நாமும் நிறைய சம்பாதித்து, நன்றாக அனுபவிக்க வேண்டாமா... அப்படி ஆசை இராதா?' என்று கேட்கின்றனர்.
ஆனால், வாழ்க்கையில் எது சுகம், எது நிம்மதி என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். நிறைய பணம் இருந்தாலும் திருடர் பயம், வருமான வரி பயம்; கடன் கொடுத்திருந்தாலும் வருமோ, வராதா என்ற பயம்; இதுவும் தவிர, யாராவது சொந்தங்கள் உதவி கேட்டு வந்து விடுவரோ என்ற பயம்.
பின்னே சேர்த்து வைத்ததை என்ன தான் செய்வது? என்ன செய்தால் திருப்தி, நிம்மதி ஏற்படும்? ஓரளவு பொருள் சேர்க்க வேண்டியது. குடும்பத்தை ஒழுங் காக நடத்தி, அதற்காக செலவிடுவது, பிறருக்கு உதவுவது, தன் இகலோக சுகத்துக்கு செலவிடுவதைப் போல் பரலோக சுகத்துக்கும் ஏதாவது செய்து கொள்வது நன்மை தரும் என்றனர்.
பரலோக சுகத்துக்கு என்ன செய்ய வேண்டும்? தான, தர்மம் தான் வழி! பெரியோர் சொன்னதையும் கேட்டு, புராணங்களில் சொல்லி இருப்பதையும் நம்பித்தான், தனக்காக இந்த தான, தர்மங்களுக்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
இதற்கு மனசு வராமல் போனால், உறவினர்கள் போன்றவர்களால் அந்தப் பணம் அழியத் தான் போகி றது. ஆளுக்கு கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் அங்கே என்ன இருக்கும். சண்டை, சச்சரவு, மனஸ்தாபம் இருக்கும். இதற்காகவா இத்தனை பாடுபட்டு சேர்த்து வைத்தது!
"கடமைக்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால் போதும். பரலோகத்துக்கு வேண் டியதை செய்து கொள்ளலாம்; மறக்கக் கூடாது. இப்படி வாழலாமே...' என்றனர் மகான்கள். நமக்கு அது புரிய வேண்டுமே!
0 கருத்துக்கள்:
Post a Comment