பாப் மன்னன்-மைக்கேல் ஜாக்சன்
உலகில் உள்ள அணைத்து இசை ரசிகர்களை தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மகிழ்வித்தவர் இசை உலகின் "சூப்பர் ஸ்டார்" மைக்கேல் ஜாக்சன்.
பாடல்களை எழுதி இசையமைத்து அதற்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவதும் இடையே கொஞ்சம் நவரச நடிப்பு திறமையையும் கலந்து "பாப்" என்ற புதிய உலகை அவர் உருவாக்கினர்.
1980களில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக-தி கிங் ஆப் பாப் இருத்த சமயத்தில் எம்.டிவியில் ஜாக்சன் நடத்திய "பீட் இட்","பில்லி ஜூன்" மற்றும் "திரில்லர்" போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு மட்டும் இல்லாமல் அந்த டிவியையும் குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தியது.
"ஐ வாண்ட் யூ பேக்" என்ற இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று, ஒட்டு மொத்த உலமும் அவரை திரும்பி பார்க்க செய்தது.
உலகளவில் விற்பனையில் சக்கப்போடு போட்ட ஆல்பங்கள்
1972 - காட் டு தி தேர்
1979 - ஆப் தி வால்
1982 - திரில்லர்
1987 - பேட்
1991 - டேஞ்சரஸ்
1995 - ஹிஸ்டரி
75 கோடி ஆல்பங்கள் மற்றும் 13 கிராமி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்று சாதனை புரிந்தார்.
20ம் நூற்றாண்டின் மாபெரும் சிறந்த முடிசூடா மன்னனாக-தி கிங் ஆப் பாப் ஹீரோவாக விளங்கியவர்.பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு.
தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணம் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய் ஹோ
0 கருத்துக்கள்:
Post a Comment