கந்தசாமி - விமர்சனம் !
நடிகர்கள் : விக்ரம்,ஷ்ரியா,பிரபு ,கிருஷ்ணா ,வடிவேலு மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் : சுசி கணேசன்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல்கள் : வைரமுத்து
ஆர்ட் : தோட்டா தரணி
பைட் மாஸ்டர் : கனல் கண்ணன்
கேமரா : N.K. ஏகாம்பரம்
தயாரிப்பு : கலைப்புலி இன்டர்நேஷனல்
ஆக்சன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை, ஆபாசம் இல்லாமல் கந்தசாமி இருப்பதால் யு சான்றிதுழ் கிடைத்துள்ளது.(ஒரு செய்தி)
பிரமாண்ட தயாரிப்பான கந்தசாமி ஒரு முழு கமர்ஷியல் கலந்த மசாலா படம் .கதையுடன் மெசேஜ் மற்றும் ஸ்டைல் இதில் உள்ளது.
அட போதுங்க முதல கதையை சொல்லுங்க .சரி இனி கதைக்கு வருவோம்.
மக்கள் அனைவரும் முருகன் கோவிலுக்கு சென்று அவர்களது குறைகளை ஒரு பேப்பரில் எழுதி மரத்தில் கட்டி விடுகிறார்கள்.முருகன் அவர்களது குறைகளை தீர்த்து வைக்கிறார்.அதனால் அந்த கோயில் பிரபலம் அடைகிறது.
விக்ரம் கந்தசாமி ஆக அந்த மரத்தில் கட்ட பட்டுள்ள மக்களின் குறைகளை ஒரு சூப்பர் ஹீரோவாக நிறைவு செய்கிறார்.இதனால் கந்தசாமி(முருகன்) புகழ் பரவுகிறது.
அட இப்படி நமக்கு ஒரு ஹீரோ கிடைக்க மாட்டாரா? ?
அந்த ஊரில் உள்ள போலீஸ்காரர்(DIG) பிரபு இதில் எதோ மர்மம் இருப்பதாய் உணர்ந்து அவர் விசாரணையை தொடங்குகிறார்.இறுதுயில் கண்டும் பிடிக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க புத்திசாலி மற்றும் தைரியமான CBI அதிகாரி கந்தசாமி, பணக்காரர்களின் கருப்பு பணம் மற்றும் வெளி நாட்டு வங்கிகளிடம் இருக்கும் பெரிய புள்ளிகளின் கருப்பு பணத்தை கொண்டு வர தனது நண்பர்களுடன் பிளான் பண்ணி அதில் வெற்றியும் பெற்று விடுகிறார் .எல்லாம் தப்புக்கு காரணம் இந்த பணம் என்று அதரத்துடன் கூறுகிறார் .(எல்லோரும் சிந்திக்க வேண்டியவை!)
ஆரம்ப கட்ட காட்சி கந்தசாமி போலீஸ் ஸ்டேஷனில் தோன்றி மன்சூர் அலிகான்னிடம் மோதுவது அசத்தல்.(கொஞ்ச நீளமும் கூட).
விக்ரம் மற்றும் ஷ்ரியாவின் காட்சிகள், அவரின் பிரமாண்டமான வீட்டில் இருக்கும் அறை மிக அழகு.ஷ்ரியாவிக்கு வில்லி ரோல் மிக சரியாக பொருந்துகிறது(சுசித்ரா டப்பிங் வாய்ஸ் அதற்கு மேலும் மெருகு சேர்க்கிறது).தான் செய்வது தப்பு என்று புரிந்து கொண்டு விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார்.பாட்டுகளில் மற்றும் காட்சிகளில் அவர் அணியும் உடைகள் பலரின் தூக்கத்தை கெடுக்கும்.
வடிவேலு ஒரு சில காட்சிகளில் சிரிப்பை உண்டாக்குகிறார்.(மற்ற காட்சிகளில் ஏனோ சிரிப்பு வரவில்லை)
மெக்சிகோ நாட்டில் நடக்கும் சண்டை மற்றும் சேசிங் காட்சிகள் படத்திற்கு ஒரு வேகத்தை உருவாக்குகிறது.
பாட்டுகள் ஏற்கனவே ஹிட் அகிவிட்தால் அதை காட்சிகள் எடுக்கும் விதத்தில் ஏனோ சோடை போய்விட்டார்கள்.(ஹலோ Mr.கந்தசாமி மற்றும் மீனாகுமாரி ஓகே ).பின்னணி இசையும் எதோ ஒரு சாதரண படத்றிகு போடபட்டவை போல உள்ளது.(இன்னும் கொஞ்சம் நல்ல இருத்திருக்கலாம்).
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் .
இந்த படத்தில் விக்ரம் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு படி மேல சென்று பயன் படுத்தி வெற்றியும் பெற்று விடுகிறார்.இந்த படத்தின் பலமே விக்ரம் தான்.
விக்ரம் பெண்ணாக மாறி சார்லி மற்றும் மைல்சாமி உடன் அடிக்கும் லூட்டி அருமை.(உடை,பாவனை அருமை).எங்கு எல்லாம் படம் கொஞ்சம் சோர்வு அடைகிறதோ அங்கு எல்லாம் விக்ரம் தன் நடிப்பால் படத்தை தன் தோள்களில் சுமந்து செல்கிறார்.
சுசி கணேசன் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை மிக வித்தியாசமாக பல நல்ல கருத்துகளுடன் நம்மை சிந்திக்க வைக்க கூடிய ஒரு பிரமாண்ட படத்தை தந்திருக்கிறார்.மூன்று வருடங்கள் தயாரிப்பு,பெரிய நடிகர்கள் என ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடயே உண்டு பண்ணிவிட்டது.ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றி விட்டதா?(எல்லோருடிய எதிர் பார்ப்புகளை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது.)
படத்தில் சில குறைகள் இருந்தாலும் ,விக்ரமின் நடிப்பு மற்றும் சிந்திக்க வேண்டிய கருத்துகள் உள்ளது .சும்மா ஜாலியாக படம் பாருங்கள்.
கந்தசாமி - நல்ல சாமியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க ஒரு துண்டு சீட்டில் எழுதி கோவிலில் உள்ள மரத்தில்
கட்டினால் கந்த...கந்த...கந்தசாமி பார்த்து கொள்ளுவார்(யாமிருக்க பயமேன் !)....
6 கருத்துக்கள்:
/பின்னர் என்ன கந்த கந்த கந்தசாமி.../
=)). அப்போ என்ன நொந்த சாமியா? விமரிசனம் நன்றாக இருக்கிறது.
நண்பரே! ஒரு வேண்டுகோள். ரைட் க்ளிக் டிசேபிள் செய்துள்ளீர்கள். ஒரு பயனும் இல்லை. ctrl+c வேலை செய்கிறது. ஆனால் உங்கள் இடுகையின் சிறப்பான பகுதியை பிரதி செய்து அதற்கு ஊக்கமளிக்கவோ, விமரிசிக்கவோ இது தடையாய் இருக்கும். ஆலோசனைதான். தவறாக எண்ண வேண்டாம்.
நல்லால்லேங்கிறதை.. ஒரு சின்ன லெட்டர் எழுதி கோயில்ல கட்டுறதுக்கு பதிலா.. முதல்ல இங்க எழுதிட்டீங்க போலருக்கு
இன்னும் படம் பார்க்கவில்லை விமர்சனங்கள் பார்த்தாச்சு...
நன்றி ,
Cable Sankar அவர்களே
ரைட் க்ளிக் டிசேபிள் செய்துள்ளீர்கள்.
நன்றி வானம்பாடிகள்,
நீக்கி விட்டேன்
நன்றி சந்ரு அவர்களே,
Post a Comment