உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

08 July 2009

பங்சன் கீகம்ப்யூட்டர் கீ போர்டில் மேலாக அமைந்துள்ள எப் கீகள் தான் பங்சன் கீகள். இவற்றைப் பலர் பயன்படுத்துவதே இல்லை. அதிக பட்சம் ஹெல்ப் வேண்டியதிருந்தால் எப்1 மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த கீகளின் சிறப்பு பயன்பாட்டினை மனதில் கொண்டால் வெகு எளிதான வேகமான செயல்பாட்டிற்கு இவை எப்படி உதவுகின்றன என்று கண்டு கொண்டு அவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.பங்சன் கீகள் பலவகையான பயன்பாட்டிற்குப் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்த புரோகிராம் இயங்குகிறதோ அவை சார்ந்தவையாக இருக்கும். அதாவது அந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள் இந்த கீகளை மனதில் கொண்டு சில செயல்பாடுகளை ஒவ்வொரு கீக்கும் வைத்துள்ளனர். பல வேளைகளில் இவை ஷார்ட் கட் கீகளின் தொகுப்பில் ஒரு கீயாக இந்த பங்சன் கீகள் பயன்படுகின்றன. CTRL, ALT, மற்றும் Shift கீகளுடன் இணைந்து இயக்கப்படும் கீகளாகவும் இவை பயன்படுகின்றன. இங்கு இவற்றின் அடிப்படை செயல்பாடுகளைக் காணலாம்.


F1
இதனை அழுத்தினால் அப்போது இயங்கும் புரோகிராமின் ஹெல்ப் பைல் நமக்குக் கிடைக்கும்.இதைச் சோதனை செய்திட உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் இடது கிளிக் செய்திடவும். பின் எப்1 அழுத்தவும். ஹெல்ப் பைல் உங்களுக்குக் கிடைக்கும். அதில் பல்வேறு வகையான ஹெல்ப் சங்கதிகள் கிடைப்பதனைப் பார்க்கலாம்.


F2
இது பெரும்பாலும் பைல் பெயரினை மாற்றி அமைத்திட உதவுகிறது.
பைல் அல்லது போல்டர் ஒன்றில் ஒரு கிளிக் செய்திடவும். பின்னர் F 2 கீயை அழுத்தினால் அந்த பைல் அல்லது போல்டரின் பெயரை மாற்றும் வசதி தரப்படும். நாம் சில வேளைகளில் பைல்களை ஸிப் செய்வோம். அப்போது குறிப்பிட்ட வழிகளில் பைல்களுக்குப் பெயரிட எண்ணுவோம். அப்போது இது மிகவும் உதவும். பைல் மெனு பெற்று பின் ரீநேம் அழுத்திச் செய்வதனைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு இந்த கீ உதவுகிறது.


F3
இந்த கீ விண்டோஸ் இயக்கத்தில் தேடுதல் செயல்பாட்டினை மேற்கொள்ள உதவுகிறது. ஆனால் மற்ற புரோகிராம்களில் இது வெவ்வேறு செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சொல் தேடுதலில் இந்த கீ சிறப்பாக உதவும்.


F4
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த கீ அட்ரஸ் பாரினைத் திறப்பதில் உதவுகிறது. விண்டோஸ் தொகுப்பில் இதனுடன் ஆல்ட் கீயைச் சேர்த்து அழுத்த அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமினை முடிவிற்குக் கொண்டு வர உதவுகிறது. விண்டோஸ் இயக்கத்தை மூடவும் இது இதே வகையில் உதவிடும்.


F5
பொதுவாக இது ரெப்ரெஷ் கீ என்றே அழைக்கப்படுகிறது. உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட இந்த கீயைப் பயன்படுத்தலாம்.


F6
அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில் ஒவ்வொரு பீல்டுக்கும் இடையே கர்சரைக் கொண்டு செல்ல இந்த கீ உதவுகிறது. விண்டோஸில் கச்ணஞு களுக்கு இடையே செல்ல இதனைப் பயன்படுத்தலாம்.


F7
இது புரோகிராம் சம்பந்தப்பட்டது. அந்த அந்த புரொகிராம்களுக்கு ஏற்றவகையில் இது செயல்படும். எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பைலைத் திறந்து இந்த கீயைப் பயன்படுத்திப் பார்த்து இதன் செயல்பாட்டினைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


F8
இந்த கீயின் முதன்மைச் செயல்பாடு விண்டோஸ் இயக்கத்தை சேப் மோடில் கொண்டு வர உதவுவதாகும்.


F9
இதுவும் புரோகிராமுடன் இணைந்து மட்டுமே செயல்படும் கீயாகும். நான் இதனை சோம்பேறி கீ என்று அழைப்பேன். ஏனென்றால் அவ்வளவாக இதன் செயல் பாடு இருப்பதில்லை. நீங்கள் வேர்ட் பயன்படுத்துகையில் இந்த கீயினைப் பயன்படுத்தினால் செலக்ட் செய்யப்பட்ட பீல்ட் அப் டேட் செய்யப்படும்.


F10
இந்த கீ புரோகிராம்களில் மெனு (File, Edit, View, Etc.). பாரினை அணுகப் பயன்படுகிறது.


F11
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் முழுத் திரையில் இணையப் பக்கங்களைக் காண இது பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ("KIOSK" mode) என அழைக்கின்றனர்.


F12
இன்னொரு சோம்பேறி. ஒரு சில புரோகிராம்கள் மட்டும் இந்த கீக்கு சில செயல்பாடுகளை அளித்துள்ளன. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் இது Save As கட்டளைக்குப் பயன்படுகிறது.


பதிவுகள் தொடரும் ...

6 கருத்துக்கள்:

சுசி July 8, 2009 at 6:42 PM  

நல்ல தகவல்கள்.

ஆனா இதில எந்த கீய போட்டா //கச்ணஞு// இதோட அர்த்தம் புரியும்னு நீங்க எழுதலையே?

//அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.//

பின்னாடி கும்முவாங்கன்னு புரிஞ்சு ரொம்ப அலேர்ட்டா எழுதி இருக்கீங்க. பிழைச்சுக்குவீங்க.

இது நம்ம ஆளு July 9, 2009 at 11:24 AM  

வருகைக்கு நன்றி சுசி அவர்களே.

SUREஷ் (பழனியிலிருந்து) July 9, 2009 at 10:23 PM  

நெரயா சொல்லிக் கொடுங்க தல..,

எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு..,

ஷாஜி July 10, 2009 at 6:50 AM  

f11 - key is also called as #full screen# mode key. used in Firefox, IE, chrome, opera and most of the browsers.

f12 - key is also used for opening firebug (if add-on is already installed) utility in firefox browsers.

இது நம்ம ஆளு July 10, 2009 at 9:22 AM  

நெரயா சொல்லிக் கொடுங்க தல..,

எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு..,

கண்டிபாக தெரிந்ததை பதிவுகளாக தருவேன் SUREஷ்அவர்களே

இது நம்ம ஆளு July 10, 2009 at 9:29 AM  

f11 - key is also called as #full screen# mode key. used in Firefox, IE, chrome, opera and most of the browsers.

f12 - key is also used for opening firebug (if add-on is already installed) utility in firefox browsers.

நன்றி ஷாஜி அவர்களே

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP