புதிய சட்டம் வருகிறது
தொழில் வரி செலுத்துவதில் புதிய திருத்தம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.
இதற்கான சட்ட மசாதாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இதுகுறித்த விவரம்:
ஒரு தொழிலை மாநகராட்சி, நகராட்சிக்குள் ஓரிடத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலோ அதே பெயரில் செய்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட நபர்களின் வருமானமானது தொழில் வரியை விதிக்கும் நோக்கத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதன்படி, ஒரே பெயரில் பல தொழில் செய்தாலும், அவர்களின் வருமானம் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு தொழில் வரி வசூலிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.
பிஸ்கோத்து
என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேண்றீங்களே?
இது கூட நல்ல ஜோக்தான்! ஆனா இதுக்கும் பணம் தர முடியாது!
பதிவுகள் தொடரும்...
0 கருத்துக்கள்:
Post a Comment