சிறந்த மாநிலம் தமிழகம்-நிதிக் கமிஷன் அறிக்கை
மீண்டும் பல நாட்கள்,வாரங்கள் கழித்து எனது பதிவுகளை தொடருகிறேன்.
தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் பங்களிப்பு ரூ.27,502 ஆக இருந்தது(2007-08). ஆனால் தமிழகத்தில் இது ரூ.32,080 ஆக இருந்தது. இது மிகச் சிறப்பான சாதனையாகும்.
தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்குகிறது என்று மத்திய நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர் கூறியுள்ளார்.
பிஸ்கோத்து
சார் நீங்க என் சம்பளத்தை உயர்த்தியே ஆகணும்.
என் பின்னாடி 2 கம்பெனி நாயா அலையறாங்க!
அப்படியா? என்னன்ன கம்பெனி உன் பின்னாடி அலையறாங்க?
செல்ஃபோன் கம்பெனியும், கிரெடிட் கார்டு கம்பெனியுந்தான்…
பதிவுகள் தொடரும் ...
1 கருத்துக்கள்:
வாங்க தல முடித்த விதம் அருமை..
தொடருங்கள்
Post a Comment