உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

30 July 2010

தெய்வம் - பாரதியாரின் வரிகள் !

தெய்வத்தை பற்றி பாரதியாரின் சில வரிகள் உங்கள் பார்வைக்கு.....வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை எட்டிப்பிடித்து அங்கே தவம் செய்தாலும் கடவுளை ஒருபோதும் காண முடியாது.மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். பயமான, கபடமான, குற்றமான,பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும் தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.கோயிலில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று நம்புபவர்கள், நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வத்தைக் காண முயல்வதில்லை. உலகை இயக்கும் பரம்பொருளே இத்தனை கோடி ஜீவராசிகளாக நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.


மாறுதல் இன்றி வளர்ச்சி இல்லை. மாறுதல் என்பதே உலகின் முதலாவது விதி. மாறுதல் என்றால் இப்போதுள்ளதை அப்படியே முழுமையாக மாற்றுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. நல்ல பயனுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு, பயனற்ற அம்சங்களை மாற்றுவதே மாற்றம்!.

இனி மாறுதல்களை எதிர் பார்க்கலாமே!

... :)

4 கருத்துக்கள்:

சுசி July 30, 2010 at 8:18 PM  

நல்ல பகிர்வு.

rk guru July 31, 2010 at 5:25 AM  

நல்ல பதிவு.......வாழ்த்துகள்

rangashri,  December 28, 2010 at 11:51 AM  

சிறப்பான கருத்துகள் goooooooood....

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP