உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

11 September 2009

கவிதைச் சிங்கம் பாரதி !தன்வீடு தன் குடும்பம் என்று சுருங்கி விடாமல் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வேண்டும்" என்று கர்ஜனை செய்த கவிதைச் சிங்கம் பாரதியாரின் நினைவு நாள் இன்று.

தனது எழுத்துக்களின் மூலம் பாமர மக்களுக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் கவிதைகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

-------------------------------------------------------------

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)
-------------------------------------------------------

கலை மகளை‌ப் போ‌ற்று‌கிறா‌ர் மகாக‌வி..
வெள்ளைத் தாமரைப் பூ வி லிருப்பாள்
வீணை செய்யு மொலியி லிருப்பாள்.....
வீடுதோறுங் கலையின் விளக்கம்
வீதிதோறு மிரண்டொரு பள்ளி
நாடு முற்றிலு முள்ளன வூ ர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ருரைத்
தீயினுக் கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கு மமுதெமெ னன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் (வெள்ளைத்)
நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்
ஆண்மையாள ருழைப்பினை நல்கீர்
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்
எதுவு நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுதும் வாரீர்.

பதிவுகள் தொடரும்...

4 கருத்துக்கள்:

வானம்பாடிகள் September 11, 2009 at 8:11 AM  

அற்புதமான கவிஞனுக்கு அழகான அஞ்சலி.

சுசி September 11, 2009 at 12:15 PM  

அருமையான பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

இது நம்ம ஆளு September 18, 2009 at 4:56 PM  

நன்றி சுசி, வானம்பாடிகள்,Anonymous,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP