உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

31 August 2009

கைதி கேரள முதல்வரை காப்பாற்றினார் !



கேரள முதல்வர் அச்சுதானந்தன் "நான், இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் கோலப்பன் என்ற கைதி தான்!' என்கிறார்.

கேரளம் முழுவதும் 1946ல் கம்யூனிஸ்ட்காரர்கள் போலீசாரால் கைது செய்து வந்தனர்.அப்போது 23 வயதான அச்சுதானந்தனை கோட்டயம் பாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று மிக கொடூரமாக தாக்கினர். பலநாள் தாக்குதலில் மூச்சு பேச்சு இல்லாமல் துவண்டு போன அவரை, இறந்து விட்டதாக நினைத்து, காட்டுக்குள் தூக்கிப் போட முடிவு செய்தனர் போலீசார். இந்த கொடுமைகளை எல்லாம் அதே லாக்கப்பில் இருந்து பார்த்து மிரண்டுபோன கோலப்பன் என்ற கைதி, "பாடி'யை தூக்கி வண்டியில் ஏற்ற உதவினார். வெகுநேரம் சென்றதும் அச்சுதானந்தனுக்கு மூச்சு இருப்பது தெரிய வந்தது. உடனே, அரும்பாடுபட்டு அவரை மருத்துவனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார் கோலப்பன்.



"எனக்கு உயிர் தந்த அந்த கைதியை அதன் பிறகு பார்க்கவில்லை. அவரை காண ஆசையாக இருக்கிறது!' என்கிறார் அச்சுதானந்தன்.

4 கருத்துக்கள்:

vasu balaji August 31, 2009 at 1:33 PM  

மனுசங்க எங்க இருக்கக்கூடாதோ அங்கதான் இருக்காங்க. இத்தனை வருசம் கழிச்சி ஒரு அரசியல் வாதி அவங்கள நினைவு கூறுதல் பெரிய விடயம். பகிர்தலுக்கு நன்றிங்க

Prapa August 31, 2009 at 3:30 PM  

எங்க பக்கம் வருவதற்கு யாருக்கும் தடையில்லை.
எனவே பயப்படாமல் அடிக்கடி வந்து போகலாம்.
வாங்க வாங்க.......வந்து கொண்டே இருங்க.
இங்கு கதவே இல்ல ........

சுசி August 31, 2009 at 8:15 PM  

நல்லவங்க இருக்குறதுனாலதான் நாட்டுல இன்னும் மழை பெய்யுது. அருமையான தகவலை அறியத் தந்ததுக்கு நன்றி.

இது நம்ம ஆளு September 1, 2009 at 10:27 AM  

நன்றி சுசி,பிரபா, வானம்பாடிகள்,
உண்மை

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP