உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

02 August 2009

நண்பர்கள்


இன்று உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'உடுக்கை இழ‌ந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.


சில உறவுகள் இவ்வுலகில் என்றும் அழியாதவை.அந்த உறவுகள் தான் நண்பர்கள்.

நல்ல நண்பர்களை பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.


உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.

நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.

பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.

வானமும் பூமியும் தொடுவது நட்பு
வயலும் மழையும் கலப்பதும் நட்பு
நிலமும் நெல்லும் வளர்வதும் நட்பு
வேராயும் விழுதாயும் படர்வதும் நட்பு
நாடு மொழிகளைத் தாண்டியது நட்பு
உலகளாவிய அமைதிக்கு வேண்டும் நட்பு
உன்னத வாழ்விற்கும் தேவை... நட்பு

கொள்கை, கருத்து, வாழ்நிலை அனைத்தையும் பொருட்படுத்தாத நட்பு, விலங்கிற்கும் மனிதனிற்கும் இடையே கூட வேர் விட்டு செழித்துள்ளது.

முதல் அறிமுகத்தில் புன்னகையாய் மலர்ந்து,புரிந்துணர்வில் வளர்ந்து,துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டதால் வேரூன்றி, பலமாகவும் ஆழமாகவும் உள்ளேயும் வெளியேயும் ஆல மரமாய் வளர்வது நட்பு.



நண்பர் தின வாழ்த்துக்கள் !

7 கருத்துக்கள்:

கார்த்திக் August 2, 2009 at 12:00 PM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கார்த்திக் August 2, 2009 at 12:00 PM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Admin August 2, 2009 at 10:34 PM  

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

vasu balaji August 3, 2009 at 10:19 AM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

. August 3, 2009 at 11:28 AM  

அசத்திட்டீங்க போங்க...!! தமிழா தமிழா பாட்ட போட்டு... அருமையான பாட்டு, அருமையான பதிவுகள்!!

anujanya August 3, 2009 at 2:51 PM  

நல்ல பதிவு. உங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

இது நம்ம ஆளு August 4, 2009 at 5:56 PM  

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

கார்த்திக்,சந்ரு,பாலா...,Priyanka,அனுஜன்யா,
கருத்துகளுக்கு நன்றி

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP