திருக்குறள்
திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு.
அயன்னை வணங்கி எனது மின் பயணத்தை தொடங்குகிறிண்............................
பதிவுகள் தொடரும் .............
39 கருத்துக்கள்:
//வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு.//
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள். அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.
தொடரட்டும் இப்பணி.
அப்படியே இந்த word verification ஐ எடுத்துடுங்க. தமிழில் தட்டச்சுவிட்டு, ஆங்கிலத்தில் மாறி ரொம்ப கஷ்டம். பின்னூட்டம் போடுபவர்களுக்கு அது ரொம்ப லொள்ளு.
கமெண்ட் மாடரேஷன் வச்சு இருக்கீங்க. அது போதுமானது.
vazhthukkal and warm welcome to the bloggers world
please remove the word verification
//அய்யனை வணங்கி எனது மின் பயணத்தை தொடங்குகிறிண்............................ //
வாழ்த்துகள் இது நம்ம ஆளு...
நல்ல அறிமுகம். வரவேற்கிறோம் வணக்கங்களுடன்...
///"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"///
சரி நீங்க எங்களுக்கு என்ன சொல்லி கலக்க போறீங்க
சீக்கிரம் சொல்லுங்க ரொம்ப ஆர்வமா இருக்கு!!
///"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"///
சரி நீங்க எங்களுக்கு என்ன சொல்லி கலக்க போறீங்க
சீக்கிரம் சொல்லுங்க ரொம்ப ஆர்வமா இருக்கு!!
///"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"///
சரி நீங்க எங்களுக்கு என்ன சொல்லி கலக்க போறீங்க
சீக்கிரம் சொல்லுங்க ரொம்ப ஆர்வமா இருக்கு!!
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
வாங்க வாங்க...
வாழ்துக்கள்.
வாழ்த்துக்கள் நல்ல பெயர் எடுக்க!
//அயன்னை வணங்கி எனது மின் பயணத்தை தொடங்குகிறிண் //
கொஞ்சம் தமிழையும் கவனியுங்க.
தொடரட்டும் உங்கள் தமிழ் பணி,வாழ்த்துக்கள்.
நம்ம ஆளாக அனைத்து மக்களுக்கும் இருங்க. வள்ளுவர் முன்னால் எழுதியதால் நல்லா இருக்கும். வள்ளுவர் அனைவருக்கும் பொதுவாக எழுதியவர்.
இனிய வாழத்துகள் சுரேஷ்.
வாழ்த்துக்கள்
வாங்க...வாங்க... உங்கள் வரவு நலம் பெருக வாழ்த்துக்கள். நல்ல விஷயத்தோட ஆரம்பிச்சிருக்கீங்க. நெறைய படிங்க.... தொடர்ந்து எழுதுங்கள்.
வாங்க நண்பா...
வந்து ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க..!
ஆதரவு என்றும் இருக்கும்..!
//
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
//
இவை அனைத்தையும் உணர்ந்து நம் வாழ்க்கை பாதையை
அமைத்துக் கொள்வோமேயானால்.. என்ன நடக்கும்??
பல நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
அருமை முதல் பதிவே ஒரே அசத்தலா இருக்கு
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் பல
//
உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு.கனவு காணுங்கள் .
//
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்
ஆரம்பமே அசத்தலா இருக்கே. தொடரட்டும் உங்கள் பணி.
/வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு./
வாருங்கள்... வந்து கலக்குங்கள்.
வாழ்த்துக்கள் தலைவா..கலக்குங்க..!
வாழ்த்துகள் இது நம்ம ஆளு...
வாங்க வாங்க
வந்தேன்...
படித்தேன்...
ரசித்தேன்...
வாழ்த்துகள்...
வந்தேன்...
படித்தேன்...
ரசித்தேன்...
வாழ்த்துகள்...
//உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு.கனவு காணுங்கள் .//
வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.
திருவள்ளுவரை புதுமாதிரி பார்க்கிறீங்க!! அ வில் இருந்து ன் வரை.
தம்பி!!
கலக்கலா ஆரம்பித்து இருக்கிறீர்கள்!! ஒரு சுற்று வாங்க!!
ஆரம்பமே அசத்தல்... தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!!!
வருக வருக.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நல்வரவு இது நம்ம ஆளு!
நன்றி!
சினிமா விரும்பி
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
முதல் பதிவே அருமையான பதிவு...!!! வாழ்த்துக்கள்...!!!
வாழ்க வளமுடன்..!!!!
Vaazhthukkal Nanba.
வாழ்த்துகள்!
தொடர்ந்து எழுதுங்கள்....உங்களுக்குள்ள அங்கீகாரம் தன்னால் தேடி வரும்.
வாழ்த்துக்கள் சொன்ன அணைத்து நெஞ்சகளகு உங்கள் தம்பியின் நன்றிகள்
Welcome thala...
//
அயன்னை வணங்கி எனது மின் பயணத்தை தொடங்குகிறிண்..
//
அப்படியா?
சூர்யாவையா, இல்லே தமன்னாவையா?
அய்யன் வள்ளுவனை தான் கூறினேன்.பிழைகள் இனி வரும் பதிவுகளில் சரி செய்ய படும்.
//"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"//
இது நல்லாயிருக்கே!சொந்தமா?கடன்வாங்கினீங்களா?எப்படியிருந்தாலும் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் மனதைக் கவர்கிறது.
Post a Comment