உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு
Showing posts with label தத்துவமும். Show all posts
Showing posts with label தத்துவமும். Show all posts

25 May 2011

ஆணவம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், “என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?” என்று கேட்டார்.



“நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?” என்று வினவினார் பரமஹம்சர். “இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த ஸித்தி கைவரப் பெற்றேன். உங்களால் நீரில் நடக்க இயலுமா?” என்று பெருமிதத்துடன் கேட்டார் யோகி.



அவரைப் பார்த்து புன்னகைத்தார் பரமஹம்சர். “அப்பனே, அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கங்கையின் அக்கரைக்கு செல்ல விரும்பினால் படகுக்காரனிடம் இரண்டு பைசா கொடுத்தால் போதும். அவன், என்னை அக்கரையில் கொண்டுபோய் விடுவான். 18 ஆண்டுகளை வீணாக்கி நீ சம்பாதித் யோக சக்தி, இரண்டு பைசாவுக்குத்தான் சமம். வேண்டாத இந்த விளையாட்டில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை!” என்றார்.



நாம் எந்தச் செயலை செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதை செலுத்தி, முழுமையான அர்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். ‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்கிறார் கீதையில் வழிகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

படித்ததில் பிடித்தது...


Read more...

30 July 2010

தெய்வம் - பாரதியாரின் வரிகள் !

தெய்வத்தை பற்றி பாரதியாரின் சில வரிகள் உங்கள் பார்வைக்கு.....



வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை எட்டிப்பிடித்து அங்கே தவம் செய்தாலும் கடவுளை ஒருபோதும் காண முடியாது.



மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். பயமான, கபடமான, குற்றமான,பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும் தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.



பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.



கோயிலில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று நம்புபவர்கள், நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வத்தைக் காண முயல்வதில்லை. உலகை இயக்கும் பரம்பொருளே இத்தனை கோடி ஜீவராசிகளாக நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.


மாறுதல் இன்றி வளர்ச்சி இல்லை. மாறுதல் என்பதே உலகின் முதலாவது விதி. மாறுதல் என்றால் இப்போதுள்ளதை அப்படியே முழுமையாக மாற்றுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. நல்ல பயனுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு, பயனற்ற அம்சங்களை மாற்றுவதே மாற்றம்!.

இனி மாறுதல்களை எதிர் பார்க்கலாமே!

... :)


Read more...

17 August 2009

தட்ஸ் தத்துவமும் !



இன்னைக்கு தூங்குன நாளைக்கு எந்திரிக்கலாம் ஆனா
நாளைக்கு தூங்குன இன்னைக்கு எந்திரிக்க முடியுமா ?


புயலால் கரையை கடக்க முடியும்
கரையால் புயலை கடக்க முடியுமா?


நீ எவளவு பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்தாலும்
உன் சாவுக்கு உன்னால ஆட முடியாது.


ட்ரைன் என்ன தான் பாஸ்ட போனாலும்,
ட்ரைன் ஓடே கடைசீ பொட்டி கடைசீயா தான் வரும்!

பதிவுகள் தொடரும்...


Read more...

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP