உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

23 May 2011

ரஜினி என்னும் சகாப்தம் - வருகிறார் !


அபூர்வம் என்றால் ரஜினி. மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர் மேன்.

ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்…இதோ ஒரு சான்று!



'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

அவர் பல சோதனைகளை சாதனையாக்கி இருக்கிறார்.அவர் இதோ வந்து விட்டார்.

பதிவுகள் தொடரும்


Read more...

08 September 2009

தேசிய விருது (55 ) - 2007

2007 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்

சிறந்த படம் - காஞ்சீவரம்

சிறந்த நடிகர்- பிரகாஷ்ரா‌ஜ்

சிற‌ந்த நடிகை - உமா ஸ்ரீ (திரைப்படம் - குலாபி டாக்கீஸ்)

சிறந்த இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன்(திரைப்படம் - நாலு பெண்ணுங்கள்)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - சக் தே இந்தியா

சிறந்த குடும்ப நல திரைப்படம் - தாரே ஜமீன் பர்

சிறந்த பாடகர் - சங்கர் மகாதேவன்(திரைப்படம் - தாரே ஜமீன் பர்)


சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்ரேயா கோஷல் (திரைப்படம் -ஜப் வி மெட்)

சிறந்த திரைக்கதை - பெரோஸ் அப்பாஸ் (திரைப்படம் - காந்தி மை ஃபாதர்)
சிறந்த துணை நடிகர் - தர்ஷன் ஜா‌ரிவாலா(திரைப்படம் - காந்தி மை ஃபாதர்)

சிறந்த ஒலி, ஒளி வடிவமைப்புக்காக (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்) - சிவாஜி(படம்)

சிறந்த தமிழ்ப் படம் - பெரியார்

சிறந்த அனிமேஷன் - இனிமே நாங்கதான்

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!


Read more...

24 August 2009

கந்தசாமி - விமர்சனம் !



நடிகர்கள் : விக்ரம்,ஷ்ரியா,பிரபு ,கிருஷ்ணா ,வடிவேலு மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் : சுசி கணேசன்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல்கள் : வைரமுத்து
ஆர்ட் : தோட்டா தரணி
பைட் மாஸ்டர் : கனல் கண்ணன்
கேமரா : N.K. ஏகாம்பரம்
தயாரிப்பு : கலைப்புலி இன்டர்நேஷனல்

ஆ‌க்சன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை, ஆபாசம் இல்லாமல் கந்தசாமி இருப்பதால் யு சான்றிதுழ் கிடைத்துள்ளது.(ஒரு செய்தி)

பிரமாண்ட தயா‌ரிப்பான கந்தசாமி ஒரு முழு கமர்ஷியல் கலந்த மசாலா படம் .கதையுடன் மெசேஜ் மற்றும் ஸ்டைல் இதில் உள்ளது.


அட போதுங்க முதல கதையை சொல்லுங்க .சரி இனி கதைக்கு வருவோம்.


மக்கள் அனைவரும் முருகன் கோவிலுக்கு சென்று அவர்களது குறைகளை ஒரு பேப்பரில் எழுதி மரத்தில் கட்டி விடுகிறார்கள்.முருகன் அவர்களது குறைகளை தீர்த்து வைக்கிறார்.அதனால் அந்த கோயில் பிரபலம் அடைகிறது.

விக்ரம் கந்தசாமி ஆக அந்த மரத்தில் கட்ட பட்டுள்ள மக்களின் குறைகளை ஒரு சூப்பர் ஹீரோவாக நிறைவு செய்கிறார்.இதனால் கந்தசாமி(முருகன்) புகழ் பரவுகிறது.



அட இப்படி நமக்கு ஒரு ஹீரோ கிடைக்க மாட்டாரா? ?

அந்த ஊரில் உள்ள போலீஸ்காரர்(DIG) பிரபு இதில் எதோ மர்மம் இருப்பதாய் உணர்ந்து அவர் விசாரணையை தொடங்குகிறார்.இறுதுயில் கண்டும் பிடிக்கிறார்.



இது ஒரு புறம் இருக்க புத்திசாலி மற்றும் தைரியமான CBI அதிகாரி கந்தசாமி, பணக்காரர்களின் கருப்பு பணம் மற்றும் வெளி நாட்டு வங்கிகளிடம் இருக்கும் பெரிய புள்ளிகளின் கருப்பு பணத்தை கொண்டு வர தனது நண்பர்களுடன் பிளான் பண்ணி அதில் வெற்றியும் பெற்று விடுகிறார் .எல்லாம் தப்புக்கு காரணம் இந்த பணம் என்று அதரத்துடன் கூறுகிறார் .(எல்லோரும் சிந்திக்க வேண்டியவை!)

ஆரம்ப கட்ட காட்சி கந்தசாமி போலீஸ் ஸ்டேஷனில் தோன்றி மன்சூர் அலிகான்னிடம் மோதுவது அசத்தல்.(கொஞ்ச நீளமும் கூட).

விக்ரம் மற்றும் ஷ்ரியாவின் காட்சிகள், அவரின் பிரமாண்டமான வீட்டில் இருக்கும் அறை மிக அழகு.ஷ்ரியாவிக்கு வில்லி ரோல் மிக சரியாக பொருந்துகிறது(சுசித்ரா டப்பிங் வாய்ஸ் அதற்கு மேலும் மெருகு சேர்க்கிறது).தான் செய்வது தப்பு என்று புரிந்து கொண்டு விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார்.பாட்டுகளில் மற்றும் காட்சிகளில் அவர் அணியும் உடைகள் பலரின் தூக்கத்தை கெடுக்கும்.



வடிவேலு ஒரு சில காட்சிகளில் சிரிப்பை உண்டாக்குகிறார்.(மற்ற காட்சிகளில் ஏனோ சிரிப்பு வரவில்லை)

மெக்சிகோ நாட்டில் நடக்கும் சண்டை மற்றும் சேசிங் காட்சிகள் படத்திற்கு ஒரு வேகத்தை உருவாக்குகிறது.

பாட்டுகள் ஏற்கனவே ஹிட் அகிவிட்தால் அதை காட்சிகள் எடுக்கும் விதத்தில் ஏனோ சோடை போய்விட்டார்கள்.(ஹலோ Mr.கந்தசாமி மற்றும் மீனாகுமாரி ஓகே ).பின்னணி இசையும் எதோ ஒரு சாதரண படத்றிகு போடபட்டவை போல உள்ளது.(இன்னும் கொஞ்சம் நல்ல இருத்திருக்கலாம்).

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் .

இந்த படத்தில் விக்ரம் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு படி மேல சென்று பயன் படுத்தி வெற்றியும் பெற்று விடுகிறார்.இந்த படத்தின் பலமே விக்ரம் தான்.



விக்ரம் பெண்ணாக மாறி சார்லி மற்றும் மைல்சாமி உடன் அடிக்கும் லூட்டி அருமை.(உடை,பாவனை அருமை).எங்கு எல்லாம் படம் கொஞ்சம் சோர்வு அடைகிறதோ அங்கு எல்லாம் விக்ரம் தன் நடிப்பால் படத்தை தன் தோள்களில் சுமந்து செல்கிறார்.

சுசி கணேசன் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை மிக வித்தியாசமாக பல நல்ல கருத்துகளுடன் நம்மை சிந்திக்க வைக்க கூடிய ஒரு பிரமாண்ட படத்தை தந்திருக்கிறார்.மூன்று வருடங்கள் தயாரிப்பு,பெரிய நடிகர்கள் என ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடயே உண்டு பண்ணிவிட்டது.ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றி விட்டதா?(எல்லோருடிய எதிர் பார்ப்புகளை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது.)

படத்தில் சில குறைகள் இருந்தாலும் ,விக்ரமின் நடிப்பு மற்றும் சிந்திக்க வேண்டிய கருத்துகள் உள்ளது .சும்மா ஜாலியாக படம் பாருங்கள்.

கந்தசாமி - நல்ல சாமியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க ஒரு துண்டு சீட்டில் எழுதி கோவிலில் உள்ள மரத்தில்
கட்டினால் கந்த...கந்த...கந்தசாமி பார்த்து கொள்ளுவார்(யாமிருக்க பயமேன் !)....


Read more...

03 August 2009

சினிமா 2008 - ஒரு கண்ணோட்டம் 1


2008 ஆம் ஆண்டு வெளியான படங்கள் - 119.அவை பற்றி அறிய கிளிக்


2008 ஆண்டில் வெற்றி பெற்ற படங்கள்.அவை

பருத்தி வீரன்
யாரடி நீ மோகினி
குருவி
முதல் முதலாய்
மலைக் கோட்டை
பொல்லாதவன்
வேல்
சந்தோஷ் சுப்ரமணியன்
அஞ்சாதே
ஒன்பது ரூபாய் நோட்டு
பிரிவோம் சந்திப்போம்
பாண்டி
வல்லமை தாராயோ
தசாவதாரம்
சுப்ரமணியபுரம்
தாம்தூம்
பொய் சொல்ல போறோம்
காளை
பழனி
அழகிய தமிழ் மகன்
சண்டை
தோட்டா
பில்லா
மிருகம்
சிலந்தி
காத்தவராயன்
சரோஜா
உளியின் ஓசை
நாயகன்
ஜெயம் கொண்டான்.

இந்த ஆண்டில் நிறைய வெற்றி படங்கள் வரும் என்று எதிர்ப்போம்.


பதிவுகள் தொடரும்...


Read more...

01 August 2009

சினிமா 2008 - ஒரு கண்ணோட்டம்


2008 ஆம் ஆண்டு வெளியான படங்கள் - 119.அவை

அஞ்சாதே
அசோகா
அபியும் நானும்
அய்யா வழி
அரசாங்கம்
அலிபாபா
அழகு நிலையம்
அழைப்பிதழ்
அறை எண் 305ல் கடவுள்
ஆடும் கூத்து
ஆயுதம் செய்வோம்
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இயக்கம்
இன்பா
இனி வரும் காலம்
உத்தரவின்றி உள்ளே வா
உருகுதே
உளியின் ஓசை
உனக்காக
உன்னை நான்
எல்லாம் அவன் செயல்
எழுதிய தாரடி
ஏகன்
ஃஅக்கு
கட்டுவிரியன்
கண்ணும் கண்ணும்
கத்திக்கப்பல்
காசிமேடு கோவிந்தன்
காதல் என்றால் என்ன
காதல் கடிதம்
காதல் வானிலே
காத்தவராயன்
காலைப்பனி
காளை
கி.மு.,
குசேலன்
குருவி
கொடைக்கானல்
சக்கரகட்டி
சக்ரவியூகம்
சண்டை
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
சரோஜா
சாதுமிரண்டா
சாமிடா
சிங்கக்குட்டி
சில நேரங்களில்
சிலம்பாட்டம்
சுட்டபழம்
சுப்ரமணியபுரம்
சூர்யா
சேவல்
தங்கம்
தசாவதாரம்
தரகு
தனம்
தாம்தூம்
தித்திக்கும் இளமை
திருதிருடா
திருவண்ணாமலை
தீக்குச்சி
தீயவன்
துரை
தூண்டில்
தொடக்கம்
தோட்டா
தோழா
நடிகை
நாயகன்
நெஞ்சத்தை கிள்ளாதே
நேபாளி
நேற்று இன்று நாளை
பஞ்சாமிர்தம்
பச்சை நிறமே
பத்து பத்து
பந்தயம்
பழனி
பட்டைய கிளப்பு
பாண்டி
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
பீமா
புதுசு கண்ணா புதுசு
புதுப்பாண்டி
பூ
பூச்சி
பொம்மலாட்டம்
பொய் சொல்ல போறோம்
பொன் மகள் வந்தாள்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
மதுரை பொண்ணு சென்னை பையன்
மலரினும் மெல்லிய
மாணவ மாணவிகள்
மாணவன் நினைத்தால்
முதல் முதல் முதல் வரை
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
மோகம்
யாரடி நீ மோகினி
ரகசிய சினேகிதனே
ராமன் தேடிய சீதை
வசூல்
வம்புச்சண்டை
வல்லமை தாராயோ
வழக்கறிஞர் அர்ச்சனா
வள்ளுவன் வாசுகி
வாரணம் ஆயிரம்
வாழ்த்துகள்
வாழ்வெல்லாம் வசந்தம்
விளையாட்டு
வெள்ளித்திரை
வேதா
வேள்வி
வைத்தீஸ்வரன்
ஜெயங்கொண்டான்.

இதில் எத்தனை படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் என்று அடுத்த பதிவில் பார்போம்.


Read more...

30 July 2009

டி.கே.பட்டம்மாள் (1919-2009)


பெண்கள் மேடையேறிப் பாடுவதும், கச்சேரி செய்வதும் ஏற்றுக் கொள்ளாத அந்த காலத்தில், இசையை தனது முழுநேரப் பணியாக ஏற்றுக் கொண்டு சாதனை படைத்தவர். இளம் வயதிலேயே மிகச் சிக்கலான பல்லவிகளைக் கூட, தனது கனமான குரலில் பாடி வியப்பை ஏற்படுத்தியவர்.

பட்டம்மாளின் இசைத்திறனை கேள்விப்பட்ட நைனாபிள்ளை, தியாகராஜ ஆராதனை விழாவில், அவர் பாடுவதற்கு ஏற்பாடு செய்தார். தியாகராஜ கீர்த்தனையில் மிகவும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அளிக்கும் அந்த வாய்ப்பு, சிறு வயதிலேயே பட்டம்மாளுக்கு கிடைத்தது. "ரக்ஷ பெட்டாரே' எனத் துவங்கும் "பைரவி' ராக பாடலை பாடி வியப்பை ஏற்படுத்தினார்.

கர்னாடக சங்கீதத்தால் தமிழக நெஞ்சங்களை தாலாட்டியவர்.

ராகம், தானம், பல்லவி ஆகிய மூன்றிலும் மேடைக்கச்சேரி செய்த முதல் பெண்மணி அவர். 1929லேயே சென்னை வானொலியில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

1939ம் ஆண்டு கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் வெளியான தியாக பூமியில் முதல் சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

1949ம் ஆண்டில் "பாரத சமுதாயம் வாழ்கவே' எனும் வாழ்க்கைப் படத்தில் வெளியான பாட்டு மிகப்பிரபலம் ஆனது. சுதந்திர தினம் என்றாலே இவரது குரல் எல்லோரது மனதிலும் ரீங்காரம் இடும்.அவரது இசைப்பயணம் ,இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பட்டம்மாளை ராஷ்டிரபதி பவன் அழைத்து பாடச் சொல்லி சிறப்பித்தார்.

சிக்கலான பல்லவிகளை பாடி, தாளங்களுக்கேற்ப அதன் நுட்பங்களை திறம்பட வெளிப்படுத்தியதால், இவர் "பல்லவி பட்டம்மாள்' என்றே அழைக்கப்பட்டார். பட்டம்மாள் பாணி எனும் தனிப்பாணியே சங்கீத உலகில் உருவானது.

சென்னை மியூசிக் அகடமியின் சங்கீத கலாநிதி விருதும் ஜனாதிபதியிடம் பத்ம பூஷண் விருதும் பெற்றார். 1998ம் ஆண்டில், பத்ம விபூஷண் விருதும் பெற்றார். 2002ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகடமியின் 75வது ஆண்டு விழாவில் பட்டம்மாள் அவர்களுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு விருது வழங்கினார்.

வாழ்நாளின் பெரும்பகுதியை கர்னாடக இசைக்காகவே வாழ்ந்த பட்டம்மாளின் மறைவு இசை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.


Read more...

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP