6ல் சாவு , 100ல் சாவு !

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.
அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார்.
அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.
ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.
கர்ணன் கூறியதுதான் பழமொழிக்கு(ஆறிலும் சாவு, நூறிலும் சாவு ) உண்மையான பொருள். 
கர்ணன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேஷன் நடித்த கர்ணன் படம் தான்.கர்ணனின் வாழ்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ஒரு பிரமிப்பை படைத்தது வாழ்ந்து இருப்பார்.அந்த இறுதி காட்சி நம் கண்களை விட்டு அகல மறுக்கும் படம் முடித்த பிறகும்.
பதிவுகள் தொடரும் ...
Read more...








