உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!

01 January 2010

வந்தே மாதரம் - தமிழ் 2010 !வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
வந்தே மாதரம் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
வந்தே மாதரம் என்போம்

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
வந்தே மாதரம் என்போம்

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
வந்தே மாதரம் என்போம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
வந்தே மாதரம் என்போம்

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
வந்தே மாதரம் என்போம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
வந்தே மாதரம் என்போம்தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


அனைவர்க்கும் எனது இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


இந்த புத்தாண்டு உங்களுக்கு இனிமையையும், பல நலன்களையும், சந்தோஷத்தையும், அமைதியையும், வெற்றிகளையும், படிப்பினைகளையும் மற்றும் பல அனுபவங்களையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!

3 கருத்துக்கள்:

Muthu,  January 1, 2010 at 11:08 AM  

Wish you the same :)

சுசி January 2, 2010 at 2:33 AM  

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP